தமிழ் மெல்ல சாகும்

நாளும் மொழி வளர்க்கும் நல்ல தமிழ்ச் சான்றோர்கள்…!

MAY 1, 2010

by அ.நம்பி

ntv01


தமிழகத்தின் இதழாசிரியர்களும் செய்தியாளர்களும் மிகுந்த தமிழுணர்வு உடையவர்கள்; மிகுந்த தமிழ்ப்பற்று உடையவர்கள்.

தங்கள் வயிற்றுப்பாட்டை எண்ணாமல் தமிழின் வளர்ச்சியே பெரிதென எண்ணுபவர்கள்; அதற்காகவே அல்லும் பகலும் பாடுபடுபவர்கள்.

தங்கள் வருமானத்தைக் கருதாமல் தமிழின் செழுமையே முதன்மையானது என்று கருதுபவர்கள்; அதற்காகவே ஊணுறக்கம் இன்றி உழைப்பவர்கள்.

தமிழின் வளர்ச்சிக்கு அப்பெருமக்கள் ஆற்றிய பணிகளும் ஆற்றிக்கொண்டிருக்கும் பணிகளும் எண்ணில் அடங்கா; எழுத்திலும் அடங்கா.

நம் ஆன்றோர்கள் ஆற்றிய அருந்தமிழ்ப் பணிகள் பலவற்றுள் புதிய சொற்களை உருவாக்கி மொழிக்கு வளம் சேர்த்ததும் ஒன்றாகும்.

நாளிதழ், கிழமையிதழ் முதலியவற்றில் பணிபுரியும் சான்றோர்களும் புத்தம் புதிய செந்தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்தி உள்ளனர்; இவ்வரும் பணியை இன்றும் தொடர்கின்றனர்.

வில்லன், வில்லி, வில்லாளன் என்னும் பழந்தமிழ்ச் சொற்கள் வில்லை உடையவன், வில் வித்தையில் வல்லவன், அருச்சுனன், வில்லிபுத்தூராழ்வார் எனப் பொருள் தருவன.
ஆனால் இவர்கள் ஆங்கிலச் சொற்களை (Villain, Villainess) வில்லன், வில்லி என்று அழகுதமிழ்ச் சொற்களாக்கி உள்ளனர். `அன்’ என்னும் ஆண்பால் விகுதியையும் `இ’ என்னும் பெண்பால் விகுதியையும் பயன்படுத்திப் புதிய சொற்களை உருவாக்கிய இவர்களின் இலக்கணப் புலமை மெச்சுதற்குரியது.

ntv03

தமிழருக்கு இன்றியமையாத ஆங்கிலச் சொற்களைத் தமிழில் தரும் பணி அரும்பணியாகும். இவ்வரும்பணியில் இவர்கள் தந்த இன்னொரு சொல் `ஹீரோ’ (Hero). இவ்வினிய சொல்லுக்குப் பெண்பாற்சொல் வேண்டுமன்றோ? ஆங்கிலச் சொல்லை (Heroine) `ஹீரோயின்’ என்று ஆக்கினார்கள். ஆயினும் இச்சொல் தமிழ் இலக்கண மரபுக்கு ஒவ்வாது இருப்பதனை உணர்ந்த இப்பெருமக்கள் `ஹீரோயினி’ என்றொரு புதிய சொல்லையும் உருவாக்கித் தமிழைச் செம்மைப்படுத்தி உள்ளனர்.

திரைப்படக் கலையை நமக்குத் தந்த வெள்ளையர்கள் பயன்படுத்திய சொற்றொடரை (Cinema Stars) அப்படியே நற்றமிழில் `சினிமா நட்சத்திரங்கள்’ என்று சொன்னார்கள். ஆனால் காலம் அப்படியே இருக்குமோ? தாரை தப்பட்டை முழங்க மேளதாளம் ஒலிக்கத் தமிழ்ப்பெருங்குடியினர் மலர்மாரி பொழிய ஒருவர் மிக மிகச் சிறந்த `நட்சத்திரம்’ ஆனார். அவரின் பெருமையை உள்ளவாறு உணர்த்தும் தகுதி தமிழுக்கு இல்லை. என்ன செய்ய? அவரின் பெருமை குறையலாமோ? அதனால் ஆங்கிலத்தில் அவரை எப்படிச் சொன்னார்களோ அப்படியே தமிழிலும் `சூப்பர்ஸ்டார்’ (Superstar) என்று சொன்னார்கள். அப்பெருமகனாரை முன்னிட்டுத் தமிழுக்கு ஒரு புதிய சொல்லை அறிமுகப்படுத்தினார்கள் இப்பெருமக்கள்.

`சூப்பர்ஸ்டார்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தி மகிழ்ந்த தமிழ்கூறு நல்லுலகம், `இச்சொல்லுக்குப் பெண்பாற்சொல் இல்லையே’ என நெடுங்காலம் வருந்தித் தவித்தது. தமிழ்மக்களின் தவிப்பையும் ஏக்கத்தையும் நன்குணர்ந்த இதழாசிரியர்களும் செய்தியாளர்களும் வறிதே இருப்பார்களோ?

ntv04தமிழ் திரையுலகின் இரு பெரும் திலகங்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் ஆகிய இருவருடனும் பல படங்களில் ஜோடியாக நடித்தவர், சரோஜாதேவி. அந்தக்கால ரசிகர்களின் `கனவுக்கன்னி’யாகவும், `சூப்பர்ஸ்டாரினி’யாகவும் இருந்தவர், அவர். சரோஜாதேவிக்கு சமீபத்தில் மத்திய அரசு `வாழ்நாள் சாதனையாளைகளுக்கான விருது’ வழங்கி கவுரவித்தது.

(தமிழக நாளிதழ் ஒன்றில் வெளிவந்த செய்தியிலிருந்து ஒரு பத்தி; திருத்தம் ஏதும் செய்யப்படவில்லை.)

`சூப்பர்ஸ்டார்’ என்னும் சொல்லுக்குப் பெண்பாற்சொல் `சூப்பர்ஸ்டாரினி’.

இரண்டுமே அருந்தமிழ்ச்சொற்கள்; அழகிய தமிழ்ச்சொற்கள்; செந்தமிழ்ச்சொற்கள்!

இவர்களை எங்ஙனம் பாராட்டுவது?

என்ன சொல்லிப் பாராட்டுவது?

தமிழ் வளர்ப்பு ஒன்றே கடமையாய்க் கொண்ட இவர்களை எப்படிப் பாராட்டினாலும் தகும்.

கண்ணனைப் பாரதியார் பாடினாற்போல் `இங்கிவரை நாம்பெறவே என்னதவம் செய்துவிட்டோம்’ என்று பாராட்டலாம்.

ஆயினும் ஒரு வரியில் சொல்லி முடிவதில்லை இவர்கள் மாண்பு; பெருங்காவியம் பாடவேண்டும்!

தமிழகத்து இதழாசிரியர்கள் வாழ்க! செய்தியாளர்கள் வாழ்க!

தமிழக நாளிதழ்களிலிருந்து செய்திகளை அப்படியே எடுத்து வெளியிட்டு மலேசிய நாட்டில் தமிழ் வளர்க்கும் இதழாசிரியர்களும் வாழ்க!

(நனவுகள் – 6.10.2008)

Advertisements

One Response to தமிழ் மெல்ல சாகும்

  1. Aanandan says:

    Tamil Tv pronunciation needs special mention.

    Karunanithi – the name is full of Sanskrit only. Karunai- nithi

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: