3 நாள்களுக்கு ஒரு முறை அழகிரி விமானப் பயணம்

First Published : 26 Apr 2010 01:57:58 AM IST

புதுதில்லி, ஏப். 25: அமைச்சரான பிறகு மூன்று நாள்களுக்கு ஒரு முறை விமானத்தில் பயணம் செய்துள்ளார் மத்திய ரசாயனத் துறை அமைச்சர் மு.க. அழகிரி.
தகவல் அறியும் உரிமை மனுவுக்கு அளித்த பதிலில் ரசாயனத் துறை அமைச்சகம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளது.
அவர் பதவியேற்ற முதல் 6 மாதத்தில் சென்னைக்கும் மதுரைக்கும் இடையே 61 முறை விமானத்தில் பறந்துள்ளார். 2009 ஆண்டு மே 29 முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை உள்ளூர் விமானங்களில் 61 முறையில் சர்வதேச விமானங்களில் 6 முறையும் அவர் பயணம் செய்துள்ளார். இந்த பயணங்களுக்கான மொத்த கட்டண தொகை ரூ. 14.5 லட்சம் ஆகும்.
அமைச்சர் அழகிரி தில்லியில் உள்ள தனது அமைச்சரக அலுவலகத்துக்கு எத்தனை நாள் வருகை தந்துள்ளார். அவர் கலந்து கொண்ட மத்திய அமைச்சரவைக் கூட்டங்கள் எத்தனை என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை.
அமைச்சருடன் எத்தனை பேர் சென்றுள்ளனர். அவர் தனது பயணங்களின் போது தங்குவதற்கான செலவுகள் எவ்வளவு என்ற கேள்விக்கும் பதிலளிக்கப்படவில்லை.
அவர் அமைச்சரான பிறகு துறை ரீதியாக நடைபெறும் கூட்டங்களில் எத்தனை கூட்டங்களுக்கு அவர் தலைமை ஏற்று நடத்தி உள்ளார் என்ற கேள்விக்கும் மெüனமே பதிலாக உள்ளது.
÷இது குறித்து அமைச்சரின் கருத்தை அறிந்து கொள்ள பிடிஐ நிறுவன செய்தியாளர் அவரை தொடர்பு கொள்ள முயன்றும் பயனில்லை. தில்லியில் உள்ள அழகிரி வீட்டை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, பதிலளிக்க யாரும் இல்லை. செல்போனிலும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் தற்போது மாலத் தீவுக்கு சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அமைச்சர் அழகிரி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கலந்து கொண்டு உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பது இல்லை என்று எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே  குற்றம்சாட்டி வருகின்றன.
இந்தப் பிரச்னை கடந்த வாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
÷ரசாயனத்துறை தொடர்பாக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தத் துறையின் இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜேனா பதிலளித்தார்.
÷இதற்கு அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் எதிர்ப்புத் தெரிவித்தார்.÷ மக்களவைத் தலைவர் மீராகுமார், அழகிரி விவகாரத்தில் அதிருப்தி தெரிவித்தார். அழகிரி எங்கே இருக்கிறார் என்பது தனக்குத் தெரியாது. அவர் வெளிநாடு செல்வது தொடர்பாக அவைக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று அவர் ஆதங்கப்பட்டார். அழகிரி வந்த உடன், “உங்களுக்கு ஏதாவது பிரச்னையா? சொல்லுங்கள் என்னால் தீர்க்க முடிந்தால் உதவுகிறேன் என சொல்லப் போகிறேன்’ என்றார் மீராகுமார். பதவியேற்று ஓராண்டு ஆகிவிட்டது. ஆனால் அமைச்சர் அழகிரியின் முகத்தைக் கூட பல உறுப்பினர்களால் பார்க்க முடியவில்லை. அவர் அவை நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருப்பது தொடர் நிகழ்வாக உள்ளது என்று உறுப்பினர்கள் புகார் கூறினர்.
அழகிரிக்கு பதில் இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் சேனா பதிலளிப்பது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே இதற்கு முன்பு அவர் பதிலளித்து உள்ளார்.
÷உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதிலளிக்க முடியாமல்தான் மத்திய அமைச்சர் அழகிரி அவை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியிருந்தார். அதேநேரத்தில் நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அவைத் தலைவர் மீராகுமாரிடம் அமைச்சர் அழகிரி அனுமதி கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

JESUS? CHRIST?- Gospels are Legends

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: