சென்னை ஐகோர்ட்டில் அம்பேத்கார் சிலை திறப்பு விழா

அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில், கலைஞரை எதிர்த்து கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!
WRITTEN BY SARA

ambetkar-statue-high-court-4.jpgambetkar-statue-high-court-1.jpg

ambetkar-statue-high-court-3.jpgசென்dmk4.jpgனை உயர் நீதிமன்றத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் முதல்வர் கருணாநிதி பங்கேற்ற போது அவரது வருகையை எதிர்த்து வழக்கறிஞர்களின் ஒரு குழுவினர் நடத்திய கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தினால், பெரும் களேபாரம் ஏற்பட்டது.

கருணாநிதி தனது உரையை தொடங்கியவுடன், வழக்கறிஞர்கள் சிலர் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க, இதில் ஆத்திரமடைந்த மற்றொரு குழுவினர் நாற்காலிகளை விட்டெறிந்துள்ளனர்.

இத்தாக்குதல்களில், தனியார் தொலைக்காட்சி ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டம் செய்த வழக்கறிஞர்களை நோக்கி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே அமைதியை கடைப்பிடிக்குமாறு செய்கை செய்த போதும், ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது. இவ் ஆர்ப்பாட்டத்திற்கு இடையிலும் உரையாற்றிய கருணாநிதி, இது போன்ற சம்பவங்களுக்கு பழக்கப்பட்டவன் என கூறினார்.

கடந்த ஆண்டு பெப்ரவரி 19 ம் திகதி போலீஸாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதலுக்கு பின்னர் உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் பங்கேற்பது இதுவே முதற்தடவையாகும்.

இச்சம்பவத்தில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர் டி.சுரேஷ் குமார் பலத்த கண்டனம் வெளியிட்டுள்ளார்.
Express News Service

attacks-in-front-of-CJI-CM-etc

CHENNAI: A cameraman of a TV channel alleged that he was beaten up and his equipment destroyed in the clash between two groups of advocates during the unveiling of Ambedkar’s statue at the Madras High Court on Sunday.

In his complaint, Live India cameraman R V Bharani Babu (29) told the Esplanade police that while shooting the fracas on the premises, when he was attacked by a group of persons, who punched him in the chest, snatched his camera worth Rs 1.11 lakh and smashed it into pieces.

Babu was taken to Kothavalchavadi police station. Mediapersons were not allowed access to the cameraman and after two hours, the police took him to the Government General Hospital for treatment. Later, he was brought to the Esplanade police station, where Inspector Muthuraja, registered an FIR.

Police sources said NDTV Hindu cameraman Devaraj was also assaulted and his equipment damaged, while Jaya TV cameramen, Ponniah Thevan and Ramesh, were beaten up. The police have arrested two activists of Ambedkar Viduthalai Munnani — Durairaj and Ezhilarasu.

Chennai Press Club, Madras Union of Journalists and Chennai Union of Journalists have demanded the arrest of all those involved in the incident.

Unruly-shameful-behaviour-Highcourt-campus
உயர்நீதிமன்ற சம்பவம்: ஜெயலலிதா கண்டனம்
சென்னை, ஏப்.26: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் வழக்கறிஞர்கள் மற்றும் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கை:

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் நேற்று நடந்த அம்பேத்கர் சிலை திறப்பு விழாவின்போது, முதல்வர், மத்திய சட்ட அமைச்சர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் ஆகியோர் முன்னிலையிலேயே 6 வழக்கறிஞர்களும் 3 பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.2009 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் நடைபெற்ற பொதுமக்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பான காவல் துறை உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாதைக் கண்டித்து, ஆறு வழக்கறிஞர்கள் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். கருணாநிதியை கண்டித்துப் பேசினார்கள் என்பதற்காக அந்த வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது.

படுகாயம் அடைந்து சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்களை கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

உயர்நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்த வன்முறையைப் படம்பிடித்த சில தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.  அவர்கள் வைத்திருந்த கேமரா உள்ளிட்ட கருவிகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.நாட்டின் மிகப் பெரிய பொறுப்புகளில் உள்ளவர்கள் முன்னிலையில் இப்படியொரு தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. எனவே இந்தச் செயலுக்கு காரணமான தமிழக அரசின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்குதலை நடத்தியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சியினர்

ஆகியோருக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, அவர்களுக்கான மருத்துவச் செலவையும் மாநில அரசே ஏற்க வேண்டும்

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்


Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: