கட்டாய மதமாற்றம்-மக்கள் ஈரோட்டில் துணை தாசில்தாரை சிறை பிடித்தனர்

Important incidents and happenings in and around the world ஈரோடு:கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாக துணை தாசில்தார் உட்பட ஆறு பேரை பொதுமக்கள் சிறை பிடித்த தால், ஈரோடு அருகே பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்ட பைபிள் மாணாக்கர்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர், தனித்தனி குழுவாகப் பிரிந்து, ஈரோடு சூரியம்பாளையம் ஊராட்சி, சொட்டையம்பாளையம் பகுதியில் நேற்று மதப் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ரெவின்யூ காலனியில் வசிக்கும் கேசவன் வீட்டுக்கு நான்கு பேர் சென்றனர். அவரது வீட்டில் துண்டு பிரசுரங்கள் கொடுத்து, ‘மக்களாட்சி முடிவுறப் போகிறது; இனி தெய்வ ஆட்சி நடக்க உள்ளது. ஏசுவை பின்பற்றுபவர் மட்டுமே உலகில் நிலைத்திருப்பர்’ என்றனர்.அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த கேசவன், ‘பிரச்னை எதற்கு செய்கிறீர்கள்; ஊருக்குள் சென்றால் பிரச்னையாகி விடும், திரும்பச் செல்லுங்கள்’ என்றார்.

கேவலமான பிரச்சாரம்: அதற்குள் மற்றொரு குழுவினர் ஊருக்குள் சென்றனர். குழுவைச் சேர்ந்த திருச்செங்கோடு தனியார் பள்ளியில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியர் வெங்கடேசன்(38), வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் அருகே பிசியோதெரபி கிளினிக் நடத்தி வரும் ஹென்றி மோகன்தாஸ்(65), மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த பொக்கிஷம்(61), யெப்சிபா (45), அண்ணா பல்கலை தொலைதூரக் கல்வி மாணவி கவுசல்யா(28), மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் நிலஎடுப்புப் பிரிவு தனி துணை தாசில்தார் ஜான்சன் ஆகியோர் பிரசாரத்தை துவக்கினர். அப்பகுதி மக்கள், நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அவர்களை சிறை வைத்தனர்.

2012 மாதிரியிலான பிரச்சாரம்: மேலும், அவர்கள் வந்த ஆம்னி வேன் பின் டயர் காற்றை இறக்கிவிட்டனர். சொட்டையம் பாளையம் ஜெயந்தி கூறுகையில்,”ஏசுவை கும்பிடு வோர் இந்த உலகத்தில் இருப்பர்; மற்றவர்கள் அழிந்து விடுவர்‘ என்று கூறி பயத்தை ஏற்படுத்தி, மதமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதால் அவர்களை சிறை வைத்தோம்,” என்றார்.  ஒன்பதாம் வகுப்பு மாணவி நிவேதா கூறுகையில், எங்கள் வீட்டுக்கு வந்தவர்கள், சாமியார்கள் மீது ஏராளமான புகார்கள் இருக்கின்றன. ஏசு ஒருவர் தான் உலகை ரட்சிப்பவர்; ஏசுவை கும்பிட்டால் எந்த பிரச்னையும் வராது’ என்று கூறி பிரசாரம் செய்தனர்,” என்றார் [பாவம், கிருத்துவர்கள் சென்னையிலேயே எத்தனைப் பெண்களை கற்பழித்தனர், பாலியல் கொடுமை செய்துள்ளனர், ஊட்டி பாதிரியில் சல்லாபங்கள் இவற்றையெல்லாம் ஏன் சொல்லவில்லை?]. கவுரி சங்கர் என்பவர் கூறுகையில், நான் முதலில் ஏதோ இன்சூரன்ஸ் நிறுவனத்தார் என்று நினைத்தேன். இறுதியாக துண்டு பிரசுரம் கொடுத்த போது தான், மதப் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர் எனத் தெரிந்தது.

மதமாற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு தொடர முடியாது: அந்த துண்டு பிரசுரத்தில், மற்ற மதத்தினர் மனதில் ஒருவித பயத்தை ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் அச்சிடப்பட்டு, கிறிஸ்துவ மதத்தில் சேரும் படி இடம் பெற்றிருந்தன,” என்றார்.பைபிள் மாணாக்கர் குழுவினர் கூறுகையில், ‘இந்த உலகம் நிலையற்றது. கடவுளால் அழிக்கப்படும். ஏசுவை நம்புவோர் கைவிடப்படமாட்டார். எல்லா வேதங்களும் இதையே கூறுகின்றன என்று தான் கூறினோம். யாரையும் மதம் மாற வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை‘ என்றனர். தகவலறிந்த சித்தோடு இன்ஸ் பெக்டர் முத்துசாமி, எஸ்.ஐ., சரவணன் மற்றும் போலீசார், பொதுமக்களிடம் இருந்து அவர்களை மீட்டு ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். மதமாற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு தொடர முடியாது எனக் கூறிய போலீசார், அவர் களிடம் எழுதி வாங்கிக் கொண்டு எச்சரித்து அனுப்பினர். அதனால், அப்பகுதி மக்கள் சற்று சமாதானமாயினர்.

மக்களாட்சியால் நன்மையில்லை; தெய்வீக ஆட்சி தான் வருங்காலத்தில் ஆளப்போகிறது: தனி துணை தாசில்தார் ஜான்சன் கூறுகையில், நான் இடம் பார்ப்பதற்காக இங்கு வந்தேன். வந்த இடத்தில் எனக்கு வேண் டப்பட்டவர்களை பிடித்து வைத்திருந்தனர். அவர்களை விடுவிக்கும்படி கூறினேன். என்னையும் பிடித்துக் கொண்ட னர். இன்று நடக்கும் மக்களாட்சியால் நன்மையில்லை; தெய்வீக ஆட்சி தான் வருங்காலத்தில் ஆளப்போகிறது,” என்றார்

Advertisements

5 Responses to கட்டாய மதமாற்றம்-மக்கள் ஈரோட்டில் துணை தாசில்தாரை சிறை பிடித்தனர்

  1. ANAND says:

    பாதிரியார் மீது கட்டாய மதமாற்றம்-ரூ.5 கோடி மோசடி புகார்
    திங்கள்கிழமை, ஏப்ரல் 6, 2009, 18:41[IST]
    http://thatstamil.oneindia.in/news/2009/04/06/tn-chennai-priest-accused-of-forced-conversions.html
    சென்னை: சென்னையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி ரூ. 5 கோடி வரை மோசடி செய்தது, கட்டாய மதமாற்ற்த்தில் ஈடுபட்டது போன்ற குற்றங்கள் புரிந்ததாக பாதிரியார் ஒருவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை அண்ணாசாலை மற்றும் தியாகராய நகரில் பாதிரியார் ஸ்டீபன் லூயிஸ் என்பவர் வேலை வாய்ப்பு அலுவலகம் நடத்தி வந்தார். அதன்மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு வாங்கி தரப்படும் என விளம்பர செய்திருந்தார்.

    இதை பார்த்த சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சண்முகவேல் என்பவர் தனது இரு மகன்கள் சுகுமாறன், சுரேஷ்குமார் ஆகியோருக்கு வெளி நாட்டில் வேலை வாங்கி தரும்படி கேட்டுள்ளார்.

    அப்போது பாதிரியார் ஒரு நபருக்கு ரூ 2 லட்சம் கொடுத்தால் பைபிள் மெடிலின் என்ற அறக்கட்டளை மூலம் இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளில் ஒன்றில் வேலை வாங்கிவிடலாம் என கூறியுள்ளார்.

    இதையடுத்து சண்முகவேல் ரூ. 4 லட்சத்தை பல தவணைகளில் அவரிடம் கொடுத்துள்ளர். அதற்கு ஒரு ரசீதும் தந்துள்ளார். பணம் முழுமையாக கொடுத்து பல மாதங்கள் ஆகியும் அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அதற்கான அறிகுறியும் தெரியவில்லை.

    இதையடுத்து சண்முகவேல் பாதிரியாரிடம் சென்று முறையிட்டுள்ளார். அப்போது பாதிரியார் நீங்கள் கிறிஸ்துவர்களாக மாறினால், எளிதாக வேலை கிடைத்துவிடும் என கூறியுள்ளார். ஏற்கனவே அவர் வசம் ரூ. 4 லட்சம் கொடுத்திருப்பதால் அவர்களும் வேறு வழியில்லாமல் மதம் மாறியுள்ளனர்.

    ஆனாலும், அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. தொடர்ந்து அவரிடம் சண்முகவேல் வற்புறுத்த, அவர் பணத்தை திருப்பி பெற்றுகொள்ளுங்கள் போலி செக் கொடுத்தார். மீண்டும் அவரை சென்று பார்த்த போது தனக்கு பெரிய புள்ளிகளை தெரியும் இனியும் இங்கு வந்தால் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார்.

    இதையடுத்து பாதிரியார் மீது பண மோசடி செய்தது, மதமாற்றம் செய்தது, போலி செக் கொடுத்தது ஆகிய புகார்களுடன் சென்னை போலீஸ் கமிஷ்னர் ராதாகிருஷ்ணனை அணுகினார் சண்முகவேல்.

    இவரை போல மேலும் பலரும் மோசடி பாதிரியார் மீது புகார் கொடுத்துள்ளனர். அவர் மொத்தம் ரூ. 5 கோடி வரை மோசடி செய்திருக்கலாம் என தெரிகிறது.

    இதையடுத்து போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

  2. ANAND says:

    மதமாற்றத்திற்கு சிறார்களை கூட்டிச் சென்றதாக 4 பேர் கைது
    ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 21, 2008, 16:57[IST]

    மடிகேரி: மதமாற்றத்திற்காக சிறார்களை கூட்டிச் சென்றதாக நான்கு பேரை கர்நாடக போலீஸார் கைது செய்து, அவர்கள் அழைத்துச் செல்லப்பட்ட ஜீப்பையும் பறிமுதல் செய்தனர்.

    கர்நாடக மாநிலம் மடிகேரி மாவட்டம் எச்.டி. கோட்டை அருகே சித்தாபூரில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    http://thatstamil.oneindia.in/news/2008/09/21/india-4-held-for-conversion.html
    கிறிஸ்தவர்கள் சிலர் மதமாற்றத்திற்காக குழந்தைகளை ஜீப்பில் அழைத்துச் செல்வதாக இந்து அமைப்பு ஒன்று போலீஸாருக்குத் தகவல் கொடுத்தது.

    இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று சம்பந்தப்பட்ட வாகனத்தை தடுத்து நிறுத்தினர். அந்தவாகனம் ஆனந்தப்பூரிலிருந்து வந்தது. ஏராளமான 56 சிறார்கள் இருந்தனர்.

    அனைவரையும் எச்.டி. கோட்டை பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஹாஸ்டலில் சேர்க்க அழைத்துச் செல்வதாக வேனில் இருந்த கேரளாவைச் சேர்ந்த பிஜூ, இடுக்கியைச் சேர்ந்த ரோஹி தாமஸ், எச்.டி. கோட்டையைச் சேர்ந்த மீனாட்சி, குமார் ஆகியோர் தெரிவித்தனர்.

    இதுபோல கடந்த இரண்டு வாரங்களில் 16 சிறார்களை அழைத்துச் சென்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து நான்கு பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து துண்டுப் பிரசுரங்கள், சிடிக்கள், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். ஜீப்பும் பறிமுதல் செய்யப்பட்டது.

    தங்களுக்கு அந்தமானைச் ேசர்ந்த வர்கீஸ் என்பவர் நிதியுதவி செய்வதாகவும் நான்கு பேரும் போலீஸில் தெரிவித்துள்ளனர். எஸ்டேட் தொழிலாளர்களையும், அவர்களது குழந்தைகளையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதாகவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

    கர்நாடகாவில், கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில், மதமாற்றம் செய்வதற்காக சிறார்களை அழைத்துச் சென்றதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  3. ANAND says:

    மாணவர்களை மதம் மாற வலியுறுத்திய ஆசிரியை சஸ்பெண்ட்
    சனிக்கிழமை, டிசம்பர் 15, 2007, 19:34[IST]
    http://thatstamil.oneindia.in/news/2007/12/11/tn-panchayat-school-teacher-suspended.html
    கரூர்: கரூர் மாவட்டம் மஞ்சபுளியம்பட்டி கிராமத்தில், மாணவ, மாணவிகளை மதம் மாறுமாறு கட்டாயப்படுத்திய ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள மஞ்சள் புளியம் பட்டியில் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் பாரதி என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இவர் தனது வகுப்பில் படித்து வரும் மாணவ, மாணவியர்களை குறிப்பிட்ட மதத்திற்கு மாறுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். மேலும், மாணவ, மாணவிகளிடம் பொட்டு வைக்காதே, பூ வைக்காதே, விபூதி பூசாதே என்று மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட பாஜக தலைவர் சிவமணிக்குத் தெரிய வந்தது. இதையடுத்து 50க்கும் மேற்பட்ட பாஜகவினருடன் சிவமணி பள்ளிக்கு வந்தார்.

    அவர்களுடன் மாணவ, மாணவியரின் பெற்றோர்களும் சேர்ந்து அனைவரும் சாலை மறியலில் குதித்தனர். மத மாற்றத்திற்கு வலியுறுத்திய ஆசிரியை பாரதியை உடனே நீக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

    தகவல் அறிந்த தோகமலை சப் – இன்ஸ்பெக்டர் திரவியநாதன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை சமாதானம் செய்ய முயற்சித்தனர். ஆனால் ஆசிரியையை நீக்கும் வரை போராட்டத்தை விட மாட்டோம் என பாஜகவினர் கூறி விட்டனர்.

    இதையடுத்து கல்வித் துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அங்கு வந்த மாவட்ட கல்வி அதிகாரி ராமசாமி விசாராணை மேற்கொண்டார். விசாரணையைத் தொடர்ந்து ஆசிரியை பாரதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் ஒரு தலித் அமைப்பை சேர்ந்த சிலர், ஆசிரியை பாரதியை சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், மாவட்ட கலெக்டர் முன்பு தீக்குளிக்கும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர். இதனால் மஞ்சபுளியம்பட்டி கிராமத்தில் பதட்டம் நிலவுகிறது.

  4. ANAND says:

    காதலின் போர்வையில் கட்டாய மதமாற்றம் !
    இரண்டு நண்பர்கள் அனுப்பி ஒரே செய்தி கீழே…

    http://www.german-proxy.de/b.php?u=Oi8vaWRseXZhZGFpLmJsb2dzcG90LmNvbS8yMDA5LzEyL2Jsb2ctcG9zdF8xMS5odG1s&b=1
    ( நன்றி: DC )

    காதலின் போர்வையில் செய்யப்படும் கட்டாய மதமாற்றத்தை தடை செய்ய சட்டம் வேண்டும்

    என்கிறார் கேரள உயர்நீதிமன்ற நீதிபதி கேடி சங்கரன். ஷாஹன்ஸா மற்றும் சிராஜுதீன் ஆகியோரின் பெயில் கோரிக்கைகளை நிராகரிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விருவரும் இரண்டு எம்.பி.ஏ மாணவிகளை மதமாற்றம் செய்ய முயற்சி செய்தபோது கைது செய்யப்பட்டனர். “கல்வி நிலையங்களுக்கு வரும் இளைய தலைமுறையினர் கல்வியை நாட வேண்டுமே அல்லாது மதஇனப்பெருக்கம் செய்பவர்களாகிவிடக்கூடாது” என்று நீதிபதி கூறினார். டிஜிபி ஜோசப்புன்னோஸ் “லவ் ஜிகாத்” அல்லது “ரோமியோ ஜிகாத்”:என்கிற பெயரில் இயக்கங்கள் இல்லை என்றாலும் இஸ்லாமிய ஆண்களின் காதல் வலையில் சிக்கும் பிறமத பெண்களை மதமாற்றம் செய்ய மிகவும் குறிவைத்து செயல்படும் முயற்சிகள் இருக்கின்றன என சொல்லியிருந்தார். அரசின் ஒரு ஸ்பெஷல் புலனாய்வு அறிக்கை இஸ்லாமிய அமைப்புகள் மேல் ஜாதியை சேர்ந்த ஹிந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களை குறிப்பாக தொழில் கல்லூரிகளில் படிக்கும் புத்திசாலி பெண்களை இந்த வலையில் விழ வைத்து மதமாற்றம் செய்ய செயல்படுவதாகக் கூறியிருந்தது.

    “கிடைக்கும் புள்ளிவிவரங்களின் படி கேரளாவில் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில் 3000-4000 அத்தகைய சம்பவங்கள் நடந்துள்ளன. அந்த புலனாய்வுத்துறை அறிக்கையின் படி இந்தியா முழுவதும் இஸ்லாமிய அமைப்புகளின் ஆதரவுடன் அத்தகைய லவ்ஜிகாத் அமைப்புகள் தங்கள் நடவடிக்கையை செயல்படுத்துகின்றன” என நீதிமன்றம் கூறியது.

    நன்றி: எக்ஸ்பிரஸ் நியூஸ் ஸெர்வீஸ் 10-டிசம்பர்-2009

  5. ANAND says:

    மதமாற்ற முயற்சி: 5 பேர் சிறைபிடிப்பு
    http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=17133
    பல்லடம்: பல்லடம் அருகே வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்து, கட்டாய மதமாற்றம் செய்ய முயன்ற ஐந்து பாதிரியார்களை பொதுமக்கள் சிறை பிடித்தனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ளது குள்ளம்பாளையம் கிராமம். இங்கு, நேற்று காலை நாகர்கோவிலைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார்கள் கண்ணையன், பிரைட், மத்தியாஸ், பால்ராஜ், வின்சென்ட் ஆகிய ஐந்து பேர் கொண்ட குழு, வீடு வீடாகச் சென்று அங்குள்ள பொதுமக்களை, ‘கிறிஸ்தவ மதத்திற்கு மாறுங் கள். உங்களுக்கு இலவச வீடு, குழந்தைகளுக்கு இலவச கல்வி, பணம் கிடைக்கும்’ எனக் கூறி துண்டு பிரசுரம் வழங்கி வற்புறுத்தியுள்ளனர்.

    கட்டாய மதமாற்றத்தை வலியுறுத்திய பாதிரியார்களை குள்ளம்பாளையத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிறை பிடித்தனர். காமநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாதிரியார்களை மீட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். ஸ்டேஷனில், ”இனி இது போல் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடக் கூடாது,” என, எச்சரித்து பாதிரியார்களை அனுப்பி வைத்தனர். பல்லடம் பகுதியில் உள்ள பல பள்ளிகளில் மாணவர்களுக்கு கிறிஸ்தவர்கள் பைபிள் வழங்கியுள்ளனர். இதற்கு இந்து அமைப்புகளிடம் இருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

JESUS? CHRIST?- Gospels are Legends

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: