DMK Govt Great Achievement- 24 hours TASMAC Shops

24 மணி நேர சரக்கு விற்பனை :’பார்’களில் களை கட்டுது கல்லா

Front page news and headlines todayஇருபத்தி நான்கு மணி நேர மருத்துவமனைகள் போல், சென்னையில் பல இடங்களில் தற்போது 24 மணி நேர டாஸ்மாக் மது விற்பனை நடந்து வருகிறது. இதனால், ‘குடி’ மகன்கள் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர். இவற்றை முறைப்படுத்தி தமிழகம் முழுவதும் செயல்படுத்தினால், அரசின் வருவாய் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

திருவிழா, திருமணம், சந்தோஷம், துக்கம், சோகம், பிரிவு உபசாரம், அலுவலக கூட்டம் என ஏதோ ஒரு காரணத்தை கூறி மது அருந்துவது வழக்கமாகிவிட்டது. உடல் வலியை நீக்க, காவல் தெய்வங்களுக்கு, இறந்தவர்களுக்கு படையலாக, அருள் வாக்கு கூற, கிரிமினல் குற்றங்களுக்கு தூண்டு கோலாக என பலவகையிலும் மது பயன்பாடு இருந்து வருகிறது.மது குடிப்பதே பெரும் குற்றமாக கருதப்பட்ட காலம் மாறி, ‘அளவாக குடியுங்கள்’ என்று டாக்டர்களும், மனைவியரும் அறிவுறுத்தும் நிலை வந்துவிட்டது. இதனால், சரக்கு அடிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதிலும் ஒரு படி மேலாக, பணிகளை முடித்து இரவு நேரத்தில் மட்டுமே குடிப்பது என்ற நிலையில் இருந்து, கிடைக்கும்போதெல்லாம் குடிக்கலாம் என்ற நிலை மாறி வருகிறது. குறைந்த வருவாய், ‘குடி’ மகன்களுக்காக, முன்பு அனைத்து இடங்களிலும் கள், சாராய விற்பனை செய்யப்பட்டு வந்ததால், நிம்மதியுடன் இருந்தனர்.

இவை அயல்நாட்டு மதுபான விற்பனையின் வளர்ச்சிக்கு தடை போட்டதால், அரசே, உள் நாட்டு சரக்குக்கு தடை விதித்தது. இதனால் அவற்றின் பெயர் கள்ளச்சாராயம் என மாறி, விற்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். அதே சமயம், அயல்நாட்டு மதுக் கடைகள் மூலைமுடுக்கெல்லாம் திறப்பு விழா கண்டன.போலி மது, சட்ட விரோத செயல்களை தடுக்கவும், மது விற்பனை மூலம் வரும் வருவாயைப் பெறவும் திட்டமிட்ட அரசு, அதை டாஸ்மாக் மூலம் கையகப்படுத்தியது. மது விற்பனை மூலம் வரும் வருமானத்தை மட்டுமே நம்பி, இலவச திட்டங்களை செயல்படுத்தும் அளவிற்கு டாஸ்மாக் விற்பனை சக்கை போடு போடுகிறது. தனியார் வசம் மதுபான விற்பனை இருந்தவரை, அதில் நன்கு சம்பாதித்து வந்த அரசியல்வாதிகளின் கண்களை இது உறுத்தியது. ‘பார்’ என்ற பெயரில், அவர்கள் மீண்டும் மது விற்பனையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, பழையபடி லாபம் சம்பாதித்து வருகின்றனர்.

துவக்கத்தில் நள்ளிரவு 12 மணி வரை செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகளை இரவு பத்து மணியுடன் மூட அரசு உத்தரவிட்டது. இதன் மூலம் மது விற்பனை நான்கு மணி நேரம் குறைந்தாலும், அரசின் வருமானம் குறையவில்லை.இந்த நேர மாற்றத்தால், அரசின் வருமானத்தோடு, பார் நடத்துபவர்களின் கல்லாவும் களைகட்டத் துவங்கியுள்ளது. மதுக் கடைகளை மூடியபின்,மதுபாட்டில்கள் பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன. டாஸ்மாக் அதிகாரிகள்,போலீசாருக்கு இது நன்கு தெரிந்தாலும், கண்டு கொள்வதில்லை. இதன் மூலம், மது விற்பனையாளர்கள், பார் நடத்தும் அரசியல்வாதிகளுக்கு துணிச்சல் அதிகரித்துள்ளது. இதற்கு அறிகுறியாக சென்னையில் பல இடங்களில் மறைமுகமாவும், வெளிப்படையாகவும் 24 மணி நேர மது விற்பனை நடந்து வருகிறது. நள்ளிரவு 1 மணி வரை அனைத்து சரக்குகளும் 20 ரூபாய் கூடுதல் விலையில் கிடைக்கிறது.

அதன்பின் காலையில், வழக்கமாக கடை திறக்கப்படும் வரை(விடியற்காலை 4 மணிக்கும் கூட) ‘டிரிபிள் க்ரவுன், எஸ்.ஜே.என்., கேப்டன்’ போன்ற விலை குறைந்த உள்ளூர் சரக்குகள் மட்டும் விற்கப்படும். இதற்கு 20 ரூபாய் கூடுதலாக தர வேண்டும்.தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில், முறைகேடாக இத்தகைய 24 மணி நேர பார்கள் ஜரூராக செயல்பட்டு வருகின்றன. ‘குடி’ மகன்களின் குறையை உடனுக்குடன் தீர்த்து வரும் அரசு, இத்தகைய 24 மணி நேர பார்களையும் முறைப்படுத்தி, குடி மகன்களின் வயிற்றில் ‘பீர்’ வார்க்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

JESUS? CHRIST?- Gospels are Legends

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: