Ketan Desai-1800 Crores, 1500 Kg Gold found

மருத்துவ கவுன்சில் தலைவர் வீடுகளில் 1800 கோடி ரூபாய் பறிமுதல்

Front page news and headlines today

Dr Ketan Desai’s palatial house: 7, Aashirvas at Friends Avenue Bungalows in Bodakdev

சென்னை:  பஞ்சாபில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் அளிக்க இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேதன் தேசாய் வீடுகளில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், ரூ.1,800 கோடி ரொக்கமாக சிக்கியது; 1,500 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. டெல்லி, அரியானா, குஜராத் மாநிலங்களில் தேசாய்க்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட இந்த பல கோடி ரொக்கம், தங்கத்தை மூட்டை மூட்டையாக லாரிகளில் ஏற்றியதை பார்த்தபொது மக்கள் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றனர்.
டெல்லியில் உள்ள மருத்துவக் கவுன்சில் தான், நாட்டில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும். அதன் தலைவராக கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வருபவர் கேதன் தேசாய். இளம் வயதில் இந்த உயர்ந்த பதவியில் அமர்ந்தவர் இவர்.
புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கு இவர் பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்குவதாக சி.பி.ஐ.க்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக ரகசியமாக கண்காணித்து வந்த சி.பி.ஐ., போலீசாரிடம் கடந்த 22ம் தேதி தேசாய் வசமாக சிக்கினார்.
பொறி வைத்து: பஞ்சாபில் கியான் சாகர் மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் பெறுவதற்காக, இந்த கல்லூரியை சேர்ந்த டாக்டர் கன்வல்ஜித் சிங் என்பவர் தேசாயை அணுகினார். ஆரம்பத்தில் தேசாய் மறுத்தார். எனினும், தேசாயின் இடைத்தரகர் ஜிதேந்திர பால் சிங்கை சந்தித்து பேரம் பேசி, முதல் கட்டமாக ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க கன்வல்ஜித் சிங் ஒப்புக் கொண்டார்.
இதையறிந்த சி.பி.ஐ. போலீசார், 22ம் தேதி ரகசியமாக காத்திருந்தனர். ரூ.2 கோடியுடன் வந்த கன்வல்ஜித் சிங்கை மடக்கி, பணத்தை பறிமுதல் செய்து, அவரையும் கைது செய்தனர். அவருடன் வந்திருந்த இடைத்தரகர் ஜிதேந்திர பால் சிங்கையும் சுற்றி வளைத்தனர். இதைத் தொடர்ந்து, தேசாய் அலுவலகத்தை முற்றுகையிட்டு அவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்று கைது செய்தனர்.
தோண்டத் தோண்ட: தேசாயை கைது செய்வதற்குள் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு போதும் போதும் என்றாகி விட்டது. எல்லா வி.வி.ஐ.பி.க்களின் பெயர்களையும் சொல்லி, அதிகாரிகளை பயமுறுத்தினார். ஆனால், எதற்கும் மசியாத சி.பி.ஐ. அதிகாரிகள், தேசாயின் கழுத்தில் கையை வைத்து ஜீப்பில் ஏற்றிச் சென்றனர். அவரிடம் விசாரணை தொடங்கியது. ஆனால், அவர் எதற்கும் வளைந்து கொடுக்கவில்லை. அவரிடம் இருந்து தகவல்களை பெறுவதே கஷ்டமாக இருந்தது. அவருடைய அலுவலக அறையிலும், டெல்லி வீட்டில் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை காட்டி, கடுமை காட்டிய பிறகுதான் வாயை திறந்தார் தேசாய். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அவருக்கு சொந்தமான டெல்லி, குஜராத், அரியானா வீடுகள், அலுவலகங்களில் சொத்துக்களை பதுக்கியிருப்பது தெரிந்தது. தகவல்களை சொன்னாலும், அவற்றை எங்கெங்கு மறைத்து வைத்திருக்கிறார் என்பதை சொல்லாமல் தவறான தகவல்களை சொல்லி அதிகாரிகளை அலைக் கழித்தார். இறுதியில் தகவல்களை பெற்ற சி.பி.ஐ. அதிகாரிகள், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள சி.பி.ஐ. போலீசாரை வைத்து சோதனை நடத்தினர். அப்போதுதான் தோண்டத் தோண்ட ரொக்கமும், நகைகளும் கிடைத்தன.
ரொக்கமாக மட்டும் கோடிகள்: டெல்லி, அரியானா, குஜராத்தில் உள்ள அவருடைய வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,800 கோடி ரொக்கமாக சிக்கியது. அகமதாபாத் வீட்டில் ரூ. 215 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த இடங்களில் ரகசிய அறைகளில் மூட்டை மூட்டையாக, 1,000, 500 ரூபாய் கட்டுகள் செங்கற்கள் போல கட்டி வைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்தபோது, சி.பி.ஐ. அதிகாரிகளுக்கே தலைசுற்றியது. இந்த இடங்களில் ரொக்கப் பணம் மட்டுமின்றி, 1,500 கிலோ தங்கமும் சிக்கியது. இதில், ஒரு சில கிலோ மட்டுமே நகைகள் இருந்தன. தங்கக்கட்டிகள் தான் அதிகமாக இருந்தன என்று சி.பி.ஐ.யை மேற்கோள்காட்டி யு.என்.ஐ. செய்தி தெரிவிக்கிறது.
இந்த ரொக்கப் பணம், தங்கத்தை மூட்டை மூட்டையாக கட்டி, லாரிகளில் ஏற்றி பாதுகாப்பான இடத்துக்கு சி.பி.ஐ. போலீசார் கொண்டு சென்றனர். வீடுகள், அலுவலகங்கள் மட்டுமின்றி, வங்கி லாக்கர்களிலும் சோதனை நடத்தப்பட்டது; அவற்றில் பல கோடிகளுக்கான டிபாசிட் ஆவணங்கள் சிக்கின.
குறைந்தப்பட்சம் 30 கோடி: தேசாய் பல ஆண்டாகவே லஞ்ச வேட்டையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று சி.பி.ஐ., அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
ஒரு கல்லூரிக்கு அங்கீகாரம் அளிக்க, குறைந்தப்பட்சம் ரூ.25 கோடியில் இருந்து ரூ.30 கோடி ரூபாய் லஞ்சம் வாங்குவார் என்று தெரிய வந்துள்ளது.
இன்னும் சில மாநிலங்களில்: தேசாய்க்கு அரியானா, உ.பி., ராஜஸ்தானிலும் வீடுகள், அலுவலகங்கள் உள்ளன. இன்று அவரை சி.பி.ஐ., போலீசார், அகமதாபாத்துக்கு அழைத்துச் செல்ல உள்ளனர்.
கைதான தேசாய், சி.பி.,ஐ. காவலில் ஐந்து நாட்கள் இருப்பார். அதற்குள் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று சி.பி.,ஐ. அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
சோதனைகள் இன்றும் தொடர்கிறது. சோதனைகளின் முடிவில் பறிமுத லான பணம் மதிப்பு மட்டும் 3 ஆயிரம் கோடியை எட்டும் என்று தெரிகிறது.

CBI seizes Rs 212 Cr from arrested MCI President

http://www.mynews.in/News/CBI_seizes_Rs_212_Cr_from_arrested_MCI_President_N49427.html

Chennai: The Central Bureau of Investigation (CBI) which has arrested Medical Council of India(MCI) President Dr Ketan Desai last night, has allegedly seized Rs 212 crore from his Ahmedabad residence.

He was produced befor the CBI court in New Delhi and remanded to 15 days judicial custody. After the court ordered that he be taken to the high security Tihar jail, the CBI moved a petition, seeking his custody for interrogation.

MCI president Ketan Desai arrested for accepting bribe of Rs. two crore

Sources close to CBI here said after the arrest, searches were going on in New Delhi and other places, and Ahmedabad. The CBI is believed to have seized cash running into several crore of rupees from a “locker” which Desai had been maintaining at a private Medical College in Ahmedabad.

CBI questions arrested MCI president

The CBI had arrested Mr Desai and two others late last night on charges of accepting a bribe of Rs two crore to grant recognition to a medical college in Punjab. Desai along with Lt Col A R N Setalvad, Secretary MCI and J P Singh and Dr Kanwaljit Singh of Gyan Sagar Medical College in Punjab have been arrested by CBI on corruption charges, the sources said.

MCI chief a victim of reforms?

கேதன்தேசாய் மீது ரூ.2,000 கோடி ஊழல் புகார்
மருத்துவக் கவுன்சிலின் தலைவராக கேதன் தேசாய் பதவிக்காலத்தில், 40க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 2,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.,)அங்கீகாரம் வழங்கி வருகிறது. மருத்துவக் கல்லூரியில் உள்ள அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், மருத்துவமனை வசதிகள், அங்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை, பேராசிரியர்கள் எண்ணிக்கை ஆய்வு நடத்தப்பட்டு எம்.சி.ஐ., அங்கீகாரம் வழங்கப்படுகிறது. எம்.சி.ஐ., தலைவராக இருப்பவர் கேதன் தேசாய். இவர், கடந்த சில ஆண்டுகளாக இந்த பதவியில் இருந்து வருகிறார். தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்க இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் கேதன் தேசாயை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நாட்டில் தற்போது 300க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 28 ஆயிரத்து 742 இடங்கள் உள்ளன. கேதன் தேசாய் எம்.சி.ஐ.,யின் தலைவராக இருந்த காலகட்டத்தில், 60க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 40க்கும் மேற்பட்டவை தனியார் மருத்துவக் கல்லூரிகள்.கேதன் தேசாய், புது மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்க ஒவ்வொரு கல்லூரிக்கும் 30 கோடி ரூபாய் லஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது. அவர் எம்.சி.ஐ., தலைவராக பதவி வகித்த காலத்தில், 40க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால், இதன் மூலமாகவே கேதன் தேசாய் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சமாக பெற்றிருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.

தனியார் கல்லூரிகளிடம், கேதன் தேசாய் தனக்கென சில எம்.பி.பி.எஸ்., இடங்களை கேட்டுப் பெற்றுள்ளார். அந்த இடங்களை ஆண்டுதோறும் விலை பேசி விற்று அதன் மூலமாகவும் பல கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளார். மருத்துவக் கல்லூரிகள் முதல் நான்கு ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கு எம்.சி.ஐ., அனுமதி பெற வேண்டும். இதிலும் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிப்படை வசதிகள் சரியில்லை என கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை அனுமதி மறுக்கப்பட்டது. பின், தமிழக அரசு மத்திய அரசிடம் முறையிட்டு அனுமதி பெறும் நிலை உள்ளது. ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகள் என்ன மாயம் செய்தோ(!) அனுமதி பெற்று விடுகின்றன. மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி, எம்.பி.பி.எஸ்., இடங்களை விற்றது என கேதன் தேசாய் 2,000 கோடி ரூபாய்க்கும் மேல் ஊழலில் ஈடுபட்டிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

இந்த ஊழலில் பல தனியார் கல்லூரிகளும், மேலும் பல அதிகாரிகளும் விரைவில் சி.பி.ஐ., பிடியில் சிக்குவார்கள் என தெரிகிறது.கடந்த 2009ம் ஆண்டு ஜூலையில், லஞ்சப் புகாரில் இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) உறுப்பினர் செயலர் நாராயண ராவ், சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் யாதவ் வீடு மற்றும் அலுவலகத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, யாதவை ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் பதவியிலிருந்து நீக்கியது.தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதில் பெருமளவில் லஞ்சப் பணம் புழங்குவதாக அப்போது புகார் எழுந்தது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் பல ஏ.ஐ.சி.டி.இ., மண்டல அலுவலகங்கள் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தற்போது இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேதன் தேசாய், லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். பொறியியல், மருத்துவம் என இரு முக்கியமான தொழிற்படிப்புகளை கண்காணிக்கும் அமைப்புகள் ஊழல் புகாரில் சிக்கியிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாட்டில், பொறியியல், மருத்துவக் கல்வியின் தரம் குறித்து மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

அம்மாடியோவ்… மலைக்க வைக்கும் கேதன் தேசாய் ஊழல்1,800 கோடி ரூபாய் ரொக்கம், ஒன்றரை டன் தங்கம் பறிமுதல் : கேதன் தேசாய் வீடுகளில் இருந்து, ரூ.1,800 கோடி ரொக்கம் மற்றும் 1.5 டன் தங்க நகைளை சி.பி.ஐ., அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாக, யு.என்.ஐ., செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:பஞ்சாபில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் கொடுப்பதற்காக, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதற்காக, இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேதன் தேசாய் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, துவக்கத்தில் ஒத்துழைக்க மறுத்தார். பிரதமர் அலுவலகத்தில் உள்ளவர்களுடன் தனக்கு நெருக்கம் இருப்பதாக கூறினார்.சி.பி.ஐ., அதிகாரிகளின் நெருக்கடி அதிகரித்ததை அடுத்து, பின்னர் ஒவ்வொரு விவரமாக தெரிவித்தார். சில முறை மாறுபட்ட தகவல்களை கொடுத்து, குழப்பம் ஏற்படுத்தினார். இவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், டில்லி மற்றும் ஆமதாபாத்தில் உள்ள அவரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அங்கிருந்த ரூ.1,801 கோடி ரொக்கம் மற்றும் 1.5 டன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. போலியான ஆவணங்கள் மூலம், மருத்துவ கல்லூரிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம் வழங்கியது தொடர்பான ஆவணங்களும் தேசாயின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.அங்கீகாரம் வழங்குவதற்கான தேதி முடிவடைந்த பின்னரும், சில மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து விண்ணப்பத்தை அவர் பெற்றதும் தெரியவந்துள்ளது.

அங்கீகாரத்துக்காக கல்லூரிகளிடம் இருந்து தலா 25 முதல் 35 கோடி ரூபாய் வரை பெற்றுள்ளார். மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கொடுப்பதற்கு முன், அந்த கல்லூரிகளை ஆய்வு செய்வதற்காக 20 கண்காணிப்பாளர்கள் தேசாயால் நியமிக்கப்பட்டனர். இவர்கள், தேசாயின் ஏஜன்ட்களாக செயல்பட்டுள்ளனர். அங்கீகாரம் பெறுவதற்கு எவ்வளவு தொகை கொடுக்கப்பட வேண்டும் என்பதை இவர்களே நிர்ணயித்துள்ளனர்.சமீபத்தில் தமிழகத்தில் மட்டும் மூன்று மருத்துவக் கல்லூரிகளுக்கு, இந்த கண்காணிப்பாளர்கள் அதிரடியாகச் சென்று ஆய்வு நடத்தினர். அவற்றில் இரண்டு கல்லூரிகள், அங்கீகாரத்துக்காக பணம் கொடுக்க சம்மதித்தன. ஆனால், ஒரு கல்லூரி மட்டும் பணம் கொடுக்க சம்மதிக்கவில்லை.

சமீபத்தில், தேசாய் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தார். மருந்து நிறுவனங்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள் பெறும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது அந்த உத்தரவு. சம்பந்தபட்ட மருந்து நிறுவனங்கள், தேசாய்க்கு பணம் கொடுக்க மறுத்ததன் காரணமாகவே, அவர் இந்த உத்தரவை பிறப்பித்தாக சி.பி.ஐ., அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்திய மருத்துவக் கவுன்சிலின் துணைத் தலைவர் கேசவன் குட்டி நாயர் உள்ளிட்ட அதிகாரிகளின் நடவடிக்கைளையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.டில்லியில் உள்ள தனது அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் மசாஜ் ஹெல்த் சென்டர் ஒன்றை தேசாய் நடத்தி வந்ததாகவும், அவர் கைது செய்யப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் அந்த ஹெல்த் சென்டர் மூடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MCI chief held in bribery case
CBI seizes papers of property worth Rs 100 cr from Ketan Desai’s residence in Bodakdev
Advertisements

One Response to Ketan Desai-1800 Crores, 1500 Kg Gold found

  1. devapriyaji says:

    Rs.1.5 crores! – for a PG seat in Radiology! 1.5 followed by seven zeroes!
    Rs.1.3 crores! – for a PG seat in Orthopaedics!

    Imagine! Can YOU pay Rs. 20000 Every single Day for FULL three years to get a post graduate degree? Are you out of your mind?

    And – Is it REALLY worth the price? This is After your already spending princely sums of money and valuable time, for MBBS!

    Where did things go so horribly wrong, and who are the anti-nationals, ruthlessly gaining from this?
    WHY do we Indians still have to manage with a pathetic doctor-population ratio of 1:1800, ( 1 : 400 in the UK and 1 : 300 in Germany)? Why do we not even THINK of training more doctors for unforeseen natural calamities like a swine flu or a mass casualty?

    ANTICIPATED DOCTOR SHORTAGE :

    A DEVELOPING India in 2025, is going to require vastly more doctors – because Indian doctors will also be attracted by the massive shortage that is predicted in the developed countries ( underline )!

    India is also projected to be the future diabetic capital of the world, not to mention TB, HIV, heart disease and a variety of other disease!

    REASONS FOR SHORTAGE IN INDIA :

    Historically, strikes by medical students in the 70’s and 80’s against increasing medical seats, coupled with the government lifting the ban on Indian doctors working abroad, guaranteed the huge shortage of doctors.

    This acute shortage lead, in the 90’s, to a huge premium for seats in the available ‘private’ medical colleges. This coincided with allegations of huge sums of corruption money to the Medical Council of India ( MCI ), responsible for granting recognition to private colleges. While whole districts go without even a single specialist!

    In 1994, the JAMA (Journal of the American Medical Association) predicted a SURPLUS of 165,000 doctors by 2000. This turned out not only to be a bad prediction, but probably intended to protect the careers of the existing doctors. Unless more medical students begin training soon, the supply of physicians will begin to shrink in about 10 years when doctors from the baby boom generation retire in large numbers.

    And these doctors will be from those scarce ones trainedfrom Indian private medical colleges.

    DOCTOR-PRIVATE COLLEGE-MCI PROTECTIONIST NEXUS/MAFIA :

    For Indians, becoming a doctor ( or any other training ) is a means to get a fortune, rather than a profession. While a doctor in the west may earn 2 or 3 times the Per Capita Income of his country, an Indian doctor expects to earn 100 times the PCI!

    Look at private medical colleges – Most of them (unethically) manipulate figures of infrastructure and patients in order to gain points for recognition.

    SRM College ( private ) / Out patients : 1,000 PD / 16 MS ortho seats / 1.5 C per seat,
    General Hospital ( govt.) / Out patients : 12,000 PD / 3 MS ortho seats/ 1 L per seat

    These figures can be interpreted in either of these TWO ways :

    1. The chances of getting a seat in a private medical college is far in excess of getting one in a government college ( with vastly better infrastructure )

    2. The government colleges are deliberately not being allocated more seats, since that will harm the prospect of the MCI making money.

    The MCI also discourages Dip.N.B courses, since that too harms its earning potential. The chief of the corrupt MCI, of two decades, called KETAN DESAI ( google for him ), is worth 2000 crores – already! While politicians PROMISE medical colleges in every district, 99% of this is NOT converted to REALITY because of this obstructionist body called MCI. Most district hospital infrastructure is not used to provide any training.

    The doctor mafia also regularly overestimates the costs of starting a medical college – in order to discourage more doctors.

    COMPARE this with the situation in western countries, where PG courses are available EVEN in their district hospitals ( where the clinical material is hardly good in comparison with those in our government hospitals). While our district hospitals ( built in the British era ), does not provide training – medical or male nursing.

    GENDER INEQUALITY IN MEDICAL EDUCATION ( AS WITH OTHER JOBS ) :

    There is a huge gender bias here, as everywhere else. The number of female medical graduates today far exceeds the fertile imagination of any androphobic of 10 years ago! For almost 2 out of 3 medical seats are taken by females in the western world today! Much of this bias is defended on the illogical ground that it ‘takes a woman doctor to treat a woman!’ Unless males wake up to this bias, ( along with the way society is structured against them ), this will not change!

    This is in keeping with the male-phobic trends in society, relegating men to menial jobs, while staking claim on managerial jobs. The justification is a grudge against males for the progress they have made as a gender.

    http://timesofindia….icleshow/4912815.cms ( MALES not allowed into nursing in Tamil Nadu )
    http://news.bbc.co.uk/2/hi/health/8077083.stm ( Bias favouring women for selection to doctor training )
    ( WAKE UP, MALE DOCTORS! SPEAK UP! )

    The poor educational infrastructure is not limited to medicine alone. For example, even though it takes just a few months to train a pilot, most Indian pilots demand a pay far in excess of one lakh a month.

    What has gone wrong with our education system as a WHOLE? Will the government sit up and take notice?
    PARTHA PERSISTENT SPAMMER
    CHENNAI, INDIA

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

JESUS? CHRIST?- Gospels are Legends

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: