சொத்து விவரம் தராத 51 எம்.பி.,க்கள்: சபாநாயகர் எச்சரிக்கை

ஏப்ரல் 24,2010,00:00 IST

Front page news and headlines today: விரைவில் தங்கள் சொத்துக்கள் குறித்த விவரங்களை எம்.பி.,க்கள் சமர்ப்பிக்கவில்லையென்றால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, லோக்சபா சபாநாயகர் மீரா குமார் எச்சரித்துள்ளார்.

பார்லிமென்ட் எம்.பி.,யாக ஒருவர் பதவியேற்றவுடன், 90 நாட்களுக்குள் தன் சொத்துக்கள் பற் றிய கணக்குகளை ஒப்படைக்க வேண்டும். ஆனால், 15வது லோக்சபா அமைக் கப்பட்டு ஓர் ஆண்டு ஆனபின்னும், 51 எம்.பி.,க்கள் தங்கள் சொத்துக் கணக்கை சமர்ப்பிக்கவில்லை.இவர்களில் லாலு, கல்யாண் சிங், திக்விஜய் சிங், பாபுலால் மராண்டி ஆகியோரும் அடக்கம். மத்திய அமைச்சர் ஆர்.பி.என்.சிங் என்பவரும் இந்த பட்டியலில் இடம் பெற்றவர்.பா.ஜ., – காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தி.மு.க., – தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளின் எம்.பி.,க்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றனர்.

இவர்களுக்கு சபாநாயகர் மீரா குமார் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘சட்டத்தை மீறும் வகையில் செய்யப்படும் இதுபோன்ற நடவடிக்கைகள் மீது, பார்லிமென்ட் அவமதிப்பு என்ற ரீதியில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிவரும். ஆகவே உடனடியாக சொத்து விவரங்களைத் தர வேண்டும்’ என்று எச்சரித்துள்ளார்.

கேள்வி நேரத்தை மாற்ற தயார் : லோக்சபா சபாநாயகர் மீரா குமார், நேற்று கூறியதாவது:கடந்த இரண்டு நாட்களாக உறுப்பினர்களின் அமளி காரணமாக கேள்வி நேரம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இதன்மூலம், உறுப்பினர்கள், தங்களுக்கு ஓட்டளித்த மக்களுக்கான ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படுகிறது.இடையூறுகளால் கேள்வி நேரம் பாதிக்கப்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாலை நேரங்களில் கேள்வி நேர அலுவல்களை நடத்துவது குறித்து திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்.

அழகிரி விவகாரம்: மத்திய அமைச்சர் அழகிரி லோக்சபா கூட்டத் தொடரில் பங்கேற்காதது குறித்து சபையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அவர் எங்கு சென்றார் என்பது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் அவரிடம் இருந்து தெரிவிக்கப்படவில்லை.அவரின் பிரச்னை என்ன என்பது குறித்து அறிந்து கொண்டு, அதற்கு தீர்வு காண விரும்புகிறேன். அதற்கு தயாராயிருக்கிறேன்.இவ்வாறு மீரா குமார் கூறினார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

JESUS? CHRIST?- Gospels are Legends

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: