சொத்து குவிப்பு வழக்கு: த‌மிழக அமைச்சர்க‌ள் 6 பேருக்கு உச்ச நீதிமன்றம் தா‌க்‌கீது

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அமை‌ச்ச‌ர்க‌ள் வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பெரியசாமி, கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கோ.சி. மணி ஆகியோ‌ர் உ‌ள்பட ‌தி.மு.க.‌வின‌ர் 10 பேரு‌க்கு உச்ச நீதிமன்றம் தா‌‌க்‌கீது அனுப்பி உள்ளது.

இவர்கள் தவிர முன்னாள் மத்திய அமைச்சர் எஸ். ரகுபதி, மதுரை முன்னாள் மேயர் குழந்தை வேலு, வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவி ரங்கநாயகி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மனைவி பி. செந்தமிழ் செல்வம் ஆகியோருக்கும் தா‌க்‌கீது அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

அ.இ.அ.தி.மு.க தலைவர்கள் ஜே.எம். ஆறுமுகம், எம். கோவிந்தன், பி. ரவீந்தரன் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்று, நீதிபதிகள் மார்க்கண்டே கட்ஜு, ஏ.கே. பட்நாயக் ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அம‌ர்வு, தி.மு.க அமைச்சர்களுக்கு தா‌க்‌கீது அனுப்ப உத்தரவிட்டது.

தா‌க்‌கீது அனுப்பப்பட்ட 10 பேர் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. அ.இ. அ.தி.மு.க ஆட்சியின்போது இந்த வழக்கு தொடரப்பட்டது. இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி கீழ் நீதிமன்றம் வழக்கை ‌நிராக‌ரி‌த்து அவர்களை விடுவித்தது.

கீழ் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ‌நிராக‌ரி‌த்தது.

இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அ.இ.அ.தி.மு.க தலைவர்கள் ஜே.எம். ஆறுமுகம், எம். கோவிந்தன், பி. ரவீந்தரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தவறுதலாக ‌நிராக‌ரி‌த்து‌ள்ளது. மூன்றாம் தரப்பினர் மேல்முறையீடு செய்வதை ஏற்க முடியாது என்ற உயர் நீதிமன்றத்தின் வாதம் ஏற்கத்தக்கதல்ல. இது சட்டப்படி சரியல்ல என்று தங்கள் மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய மாநில அரசு தவறிவிட்டது. எனவே இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தனர்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 6 தி.மு.க அமைச்சர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு தா‌க்‌கீது அனுப்ப உத்தரவிட்டனர்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

JESUS? CHRIST?- Gospels are Legends

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: