எங்கே அழகிரி? நாடாளுமன்றத்தில் அமளி

First Published : 24 Apr 2010 01:47:52 AM IST

புதுதில்லி, ஏப். 23: நாடாளுமன்ற நிகழ்ச்சிகளில் மத்திய ரசாயனத் துறை அமைச்சர் அழகிரி பங்கேற்காதது தொடர்பாக  இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் எதிர்க்கட்சிகள் பிரச்னையை எழுப்பின.

மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் இப் பிரச்னையை எழுப்பினார். அவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான ஹமீத் அன்சாரியிடம் அழகிரி அனுமதி பெற்று வெளிநாடு சென்றாரா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

எல்லாவற்றுக்கும் மேலாக மக்களவைத் தலைவர் மீராகுமார்,”அமைச்சர் மு.க. அழகிரி எங்கே போனார்’ என்பது எனக்கே தெரியாது என்று செய்தியாளர்களிடம் ஆதங்கத்துடன் கூறினார்.

அமைச்சர் அழகிரி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கலந்து கொண்டு உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பது இல்லை என்று எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே  குற்றம்சாட்டி வருகின்றன.

அழகிரி வராதது தொடர்பான பிரச்னை மக்களவையில் வியாழக்கிழமை எழுப்பப்பட்டது. வெள்ளிக்கிழமை மாநிலங்களவையிலும் இப் பிரச்னை எழுப்பப்பட்டது. மாநிலங்களவையில் இதுதொடர்பான விவாதத்தில் மைத்ரேயனுக்கு ஆதரவாக பாஜக உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.

ரசாயனத்துறை தொடர்பாக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தத் துறையின் இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜேனா பதிலளித்தார். இதற்கு அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் எதிர்ப்புத் தெரிவித்தார். உங்களிடம் (அன்சாரியிடம்) அழகிரி அனுமதி பெற்றாரா என்று கேட்டார். ஆனால் அதற்கு அன்சாரி பதிலேதும் கூறாமல், தொடர்ந்து கேள்விகளை கேட்குமாறு மைத்ரேயனைக் கேட்டுக்கொண்டார். இந்த விஷயத்தை எனது அறைக்கு வந்து விவாதிக்கலாம். இப்போது கேள்வியைக் கேளுங்கள் என்று அன்சாரி மீண்டும் கேட்டுக்கொண்டார்.

ஆனால் மைத்ரேயனுக்கு ஆதரவாக பாஜக உறுப்பினர்கள் பிரகாஷ் ஜவடேகர், ருத்ர நாராயண் பானி, வினய் கட்டியார் ஆகியோர் பேசினர்.

அமைச்சர் அழகிரிக்கு ஆதரவாக திமுக உறுப்பினர் டி சிவா மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர்.

அழகிரி அவைக்கு வராதது குறித்து பாஜக தலைவர் அருண் ஜேட்லியும் குறை கூறினார். எல்லா அமைச்சர்களும் நாடாளுமன்றத்துக்கு கட்டுப்பட்டவர்கள். ஆனால் அழகிரி மட்டும் விதிவிலக்கு என்று கூறினார்.

இது குறித்து பின்னர் விவாதிக்கலாம். தற்போது கேள்வி நேரத்தை தொடரலாம் என்று அவைத் தலைவர் அன்சாரி கூறினார். இதை ஏற்காமல் பாஜக, அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் எழுப்பிய வண்ணம் இருந்தனர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது.

இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய மக்களவைத் தலைவர் மீராகுமார், அழகிரி விவகாரத்தில் அதிருப்தி தெரிவித்தார். அழகிரி எங்கே இருக்கிறார் என்பது தனக்குத் தெரியாது. அவர் வெளிநாடு செல்வது தொடர்பாக அவைக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று அவர் ஆதங்கப்பட்டார். அழகிரி வந்த உடன், “உங்களுக்கு ஏதாவது பிரச்னையா சொல்லுங்கள் என்னால் தீர்க்க முடிந்தால் உதவுகிறேன் என சொல்லப் போகிறேன்’ என்றார் மீராகுமார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

JESUS? CHRIST?- Gospels are Legends

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: