Next Lalit Modi லலித் மோடி தான் ? ஐ.பி.எல்., சூதாட்டம் ஆவணங்கள் சி்க்கின

Front page news and headlines today
ஏப்ரல் 19,2010,15:33  IST

புதுடில்லி: மத்திய அமைச்சர் பதவியை பறித்த ஐ.பி.எல்., கிரிக்கெட் விவகாரம் மேலும் சூடு பிடிக்கிறது. இந்த அணி போட்டிகள் சூதாட்டத்தில் சேர்மன் லலித்மோடி ஈடுபட்டிருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஆவணங்கள் சிக்கி இருப்பதாக இத்துறை உயர் வட்டாரம் தெரிவிக்கிறது. ஐ.பி.எல்., துவங்கிய சில ஆண்டுகளில் இங்கு கோடிக்கணக்கில் பணம் குவியத்துவங்கியது. ஒவ்வொரு அணிகளும் ஆயிரம் கோடிக்கணக்கில் விலை போனது.

இந்த அணிக்கு வீரர்கள் ஏலம் மூலம் தேர்வு செய்யப்பட்ட போதும் கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டது. ரசிகர்கள் முதல் அனைவரும் வாயில் கை வைத்து அசந்தனர். மேலும் நாட்டில் கோடிகளில் புரளும் அதிபர்கள் இந்த அணி விவகாரத்தில் புகுந்து கொள்ளை லாபம் ஈட்டி வந்தனர். ஐ.பி.எல்., அணியில் விளையாடும் வீரர்களுக்கு அவரவர் ஆட்டதிற்கேற்ப கோடிககள் அள்ளி பரிசாக வழங்கப்படும். இந்த அணி சேர்மன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை தவிர தற்போது ஏக போக வாழ்க்கை நடத்தி வருகிறார். தனி விமானம், விலை உயர்ந்த பி.எம்.டபுள்யூ கார் வரை அந்தஸ்து உயர்ந்திருக்கிறது. இதனால் இந்த அணி மீதான வருமானம் மற்றும் ஈடுபடுவோர் மீது வருமான வரித்துறை கண்காணிப்பை öலுத்தினர்.

இதற்கிடையில் பெண் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ஏலத்தில் தலையிட்ட காரணத்தினால் சசி தரூர் பதவியை இழந்தார். இதனையடுத்து மத்திய அரசின் கண் லலித்மோடி மீது திரும்பியுள்ளது. எக்னாமிக் டைம்ஸ் பத்திரிகையில் மோடி மீதான வருமான வரித்துறையினர் சேகரித்த தகவலின்படி அவர் கிரிக்கெட சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்றும் கோடிட்டு காட்டியுள்ளது. இந்த செய்தியில் மோடி தரப்பில் அவரது பினாமிகள் மூலம் கிரிக்கெட் சூதாட்டம் நடந்திருக்கிறது. இது தொடர்பாக இ.மெயில் மற்றும் செல்போன் உரையாடல்கள் மூலம் ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த அணியின் உரிமையாளர்கள் யார்? யார்? உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரித்து வைத்துள்ளனர். இதனையடுத்து மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாலு பிரசாத் யாதவ் பார்லி.,யில் குரல் எழுப்பியுள்ளார். இந்த ஐ.பி.எல்., அணியில் கறுப்பு பணம் புழங்குவதாகவும், இது குறித்து தீவிவரவ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரினார்.

நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி என்ன சொல்கிறார் ? : இந்த விஷயம் குறித்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில் ; ஐ.பி.எல்., தொடர்பான அனைத்து பிரிவு விசாரணையும் நடத்தப்படும். இதில் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. இன்று மாலை நிதி அமைச்சக ஆலோசனை கூட்டம் நடக்கவிருக்கிறது. இந்தக்கூட்டத்தில் நிதிதுறை செயலர் மற்றும் அமலாக்க பிரிவு அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

பி.சி.சி.ஐ ., அவசர கூட்டம் : இதற்கிடையில் மோடி விவகாரம் தொடர்பாக அதிர்ச்சி அடைந்துள்ள பி.சி.சி.ஐ ., அவசர கூட்டம் இன்னும் ஒரிரு நாளில் கூட்டவிருக்கிறது. இந்தக்கூட்டத்தில் லலித்மோடியை நீக்கி விட்டு வேறு புதிய நபரை நியமிக்கும் தீர்மானம் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் வரிச்சலுகை பெற்ற ஐ.பி.எல்., அணி விவகாரம் கோடிக்கணக்கில் ஊழல் நடந்த விஷயம் வெளிச்சத்திற்கு வரும் நேரத்தில் கிரிக்கெட் உலகில்

பரபரப்பான அதிரடி மாற்ற நிகழ்வுகள் காத்திருக்கிறது.

சூதாட்டம், ரகசிய பேரங்கள் மூலம் கோடிக்கணக்கில் பணம் குவித்துள்ளார் லலித் மோடி –வருமான வரித்துறை

[டெல்லி: ஐபிஎல் [^] ஆணையர் லலித் மோடி சூதாட்டம், ரகசிய பேரங்கள் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளதாக வருமான வரித்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மோடியின் பதவி பறிபோகும் அபாயம் எழுந்துள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதாரண நபராக இருந்து வந்த மோடி தற்போது ஒரு விமானத்தை வைத்துள்ளார். மிகப் பெரிய சொகுசுக் கப்பல் அவருக்கு உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் வகை காரை வைத்துள்ளார். பிஎம்டபிள்யூ கார் வைத்துள்ளார். அனைத்தையும் அவர் 3 ஆண்டுகளில் சம்பாதித்துள்ளார் என்றும் வருமான வரித்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களாக மோடியைக் கண்காணித்து வந்த வருமான வரித்துறை அவர் தொடர்பான ஒரு அறிக்கையைத் தயாரித்துள்ளது. இந்த அறிக்கையின் விவரங்கள் தற்போது கசிந்துள்ளன.

கடந்த ஆண்டு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் மோதினார் மோடி. இதையடுத்து அவர் குறித்த விவரங்களையும், ஐபிஎல் நிர்வாகம் குறித்தம், அணிகளின் பண புழக்கங்கள் குறித்து ரகசியமாக கண்காணிக்க ஆரம்பித்ததாம் வருமான வரித்துறை.

வருமானவரித்துறை அறிக்கையில் மோடியின் நிழல் உலக வாழ்க்கை குறித்து விலாவாரியாக கூறப்பட்டுள்ளதாம்.

ராஜஸ்தானில் அவர் மேற்கொண்ட நில முறைகேடுகள், பல நூறு கோடி கணக்கில் அவர் குவித்துள்ள சொத்துக்கள் குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை விட அதிர்ச்சிகரமாக பெட்டிங் எனப்படும் கிரிக்கெட் சூதாட்டத்திலும் மோடி ஈடுபட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளை பிக்ஸ் செய்துள்ளார் மோடி என்றும் கூறப்படுகிறது.

இந்த பெட்டிங் வேலைகளில் அவர் முதல் இரு ஐபிஎல் தொடர்களில் ஈடுபட்டதாகவும், இந்த தொடரில் அவர் ஈடுபடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடியின் இ மெயில் முகவரி, இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் ஆகியவற்றைக் கண்காணித்து மோடி குறித்த தகவல்களை வருமான வரித்துறை தோண்டி எடுத்துள்ளதாம்.

சூதாட்டம் தவிர கருப்புப் பணம், பண மோசடி உள்ளிட்டவற்றிலும் மோடி ஈடுபட்டதாக வருமான வரித்துறை அறிக்கை கூறுகிறது.

மோடி தவிர அவரது உதவியாளர்கள், கூட்டாளிகள் சிலரையும் வருமான வரித்துறை தனது கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளது.

மோடியின், மோடி என்டர்டெய்ன்ட்மென்ட் நிறுவனத்தன் தலைமை செயலதிகாரியாக இருப்பவர் தீபா ரெய்ஸாதா. இவர்தான் மோடியின் வெளிநாட்டு பண பரிவர்த்தனை உள்ளிட்டவற்றைக் கவனித்து வருகிறாராம். இவரையும் வருமான வரித்துறை தனது கண்காணிப்பில் கொண்டு வந்துள்ளது. கடந்த 10 வருடங்களாக தீபா இங்கு பணியாற்றி வருகிறார்.

மோடிக்காக பெட்டிங்கில் ஈடுபட்ட நபரையும் வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அந்த நபரின் பெயர் சமீர் துக்ரால். இவர்தான் ஐபிஎல் போட்டிகளை வைத்து சூதாடி வருபவர். போட்டிகளின் முடிவுகளையும் நிர்ணயிக்கும் வல்லமை படைத்தவராம் இவர். மோடிக்காக இவர்தான் பெட்டிங்கில் ஈடுபட்டு வந்த்தாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மோடி மூன்று ஐபிஎல் அணிகள் மீதுதான் மிகுந்த நட்புறவுடன் இருந்து வருகிறார். எனவே அந்த அணிகள் கலந்து கொண்ட போட்டிகளின் முடிவுகளை தற்போது வருமான வரித்துறையினர் ஆராய்ந்து வருகின்றனராம்

Advertisements

One Response to Next Lalit Modi லலித் மோடி தான் ? ஐ.பி.எல்., சூதாட்டம் ஆவணங்கள் சி்க்கின

 1. devapriyaji says:

  ஐடி சோதனைக்கு முன்பாக லலித் மோடி அலுவலகத்திலிருந்து ரகசியமாக வெளியேறிய பெண்- புதிய சர்ச்சை
  சனிக்கிழமை, ஏப்ரல் 17, 2010, 12:20[IST]

  மும்பை: சமீபத்தில் லலித் மோடியின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பு ஒரு பெண் லேப்டாப் கம்ப்யூட்டர் மற்றும் சில முக்கிய கோப்புகளுடன் அங்கிருந்து வெளியேறியது ரகசியக் காமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  ஐபிஎல் கமிஷனராக உள்ள மோடியின் அலுவலகம் மும்பையில் உள்ள சீசன்ஸ் ஹோட்டலில் உள்ளது. அங்கு சமீபத்தல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஆனால் அவர்கள் வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு அங்கிருந்து ஒரு பெண் வெளியேறியுள்ளார்.

  கையில் லேப்டாப் கம்ப்யூட்டர் மற்றும் சில கோப்புகளுடன் அவர் வெளியேறியது ஹோட்டலின் ரகசியக் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அவர் யார் என்பது தெரியவில்லை.

  இந்த புதிய தகவலால் மோடி விவகாரம் மேலும் சிக்கலாகியுள்ளது. யார் அந்த மர்மப் பெண் என்ற கேள்வி விஸ்வரூபமெடுத்துள்ளது.

  இதற்கிடையே, தரூரின் காதலியாக கூறப்படும் சுனந்தா குறித்து இன்னொரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. கொச்சி ஐபிஎல் அணியின் விற்பனையின் மூலம் கிடைக்கும் லாபத்தில் முழுத் தொகையும் அவருக்கே கிடைக்குமாம். நஷ்டம் ஏற்படும்போது, ஒரு சதவீத நஷ்டம் மட்டுமே அவரைச் சேரும். மீதமுள்ள 99 சதவீத நஷ்டத்தை மற்ற பங்குதாரர்கள் பகிர்ந்து கொள்ளும் வகையில அந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாம்.

  இதன் மூலம் ரெண்டஸ்வஸ் நிறுவனத்தில் சுனந்தாவின் பங்கு மிகப் பெரிது என்பது தெரிய வருகிறது. மேலும் முற்றிலும் சுனந்தாவுக்கு சாதகமாகவே இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: