ரூ.3 கோடி மோசடி வழக்கு: கோர்ட்டில் சி.எஸ்.ஐ., பிஷப் சரண்

Court news detail
பிப்ரவரி 24,2010,00:00  IST

http://www.dinamalar.com/court_detail.asp?news_id=5258

மூன்று கோடி ஊழல் விசுவாச ஊழியர்:

மூன்று கோடி ரூபாய் மோசடி வழக்கில் முன்ஜாமீன் பெற்ற சி.எஸ்.ஐ., திருச்சபை பிஷப், ஐகோர்ட் நிபந்தனைப்படி நேற்று கோவை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார். கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் வசிப்பவர் மாணிக்கம் துரை. சி.எஸ்.ஐ., திருச்சபை அறக்கட்டளை தலைவர். எட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் திருச்சபைகளை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ளார். திருச்சபை அறக்கட்டளைக்கு சொந்தமான மூன்று கோடி ரூபாய் நிதியை மோசடி செய்து விட்டதாக, இவர் மீது புகார் எழுந்தது. இம்மோசடி குறித்து சிங்காநல்லூரைச் சேர்ந்த திருச்சபை உறுப்பினர் பிரேம்குமார், போலீசில் புகார் கொடுத்தார். ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரித்து, பிஷப் மாணிக்கம் துரை, அமிர்தம், மூர்த்தி, தனபால் உட்பட 31 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். பின், இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றப்பட்டது.
ஊழல் மாணிக்கம் சரண்: போலீசார் தேடுவதை அறிந்த பிஷப், கோவை மாவட்ட நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இம்மனுவை நீதிபதி சொக்கலிங்கம் டிஸ்மிஸ் செய்தார். தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட், “கோவை ஜே.எம்.எண்: 3 கோர்ட்டில் சரணடைந்து, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான இரு நபர் ஜாமீன் வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட கோர்ட்டில் பாஸ்போர்ட் ஒப்படைக்க வேண்டும். தவிர, தினமும் காலை 10.00 மணிக்கு கோவை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜராகி, கையெழுத்திட வேண்டும்’ என, நிபந்தனை விதித்து, முன்ஜாமீன் வழங்கியது. நேற்று, கோவை ஜே.எம்.எண்-3 கோர்ட்டில் மாஜிஸ்திரேட் (பொறுப்பு) அருணாச்சலம் முன்னிலையில் சரணடைந்த பிஷப் மாணிக்கம் துரை, ஐகோர்ட் நிபந்தனைப்படி, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார். இவருக்காக மதுக்கரையைச் சேர்ந்த குணசிங், சங்ககிரியைச் சேர்ந்த வக்கீல் கிறிஸ்டோபர் மற்றும் ஈரோடைச் சேர்ந்த தனபால் ஒரு கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணங்களை தாக்கல் செய்தனர். ஆவணங்கள் பரிசீலனைக்குப் பின், ஜாமீனில் செல்ல பிஷப்புக்கு கோர்ட் அனுமதி வழங்கியது.
பத்திரிகையாளர்கள் மீது ஆத்திரம்: பிஷப் மாணிக்கம் துரை, கோர்ட்டில் சரணடைந்தது குறித்த செய்தி சேகரிக்க நிருபர்கள், கோர்ட் வளாகத்தில் சூழ்ந்தனர். நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியே வந்த பிஷப்பை, போட்டோகிராபர்கள் படம் எடுத்தனர். அப்போது, பிஷப்புக்கு பாதுகாப்பாக வந்த இருவர், போட்டோகிராபர்களை படம் எடுக்க விடாமல் தடுத்து,கேமராவை தள்ளி விட்டனர். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த போட்டோகிராபர்கள், சம்பந்தப்பட்ட நபரை சுற்றிவளைத்தனர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட, பிஷப் சார்பில் ஆஜரான வக்கீல்கள் திடீரென கூட்டத்தில் புகுந்து, பத்திரிகையாளர்களை சமாதானப்படுத்தி, வாலிபரை அழைத்துச் சென்றார். இச்சம்பவம் கோர்ட் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

JESUS? CHRIST?- Gospels are Legends

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: