விடுப்பில் செல்ல நீதிபதி பால் தினகரனுக்கு உத்தரவு

விடுப்பில் செல்ல நீதிபதி தினகரனுக்கு உத்தரவு ; நில விவகாரத்தில் சிக்கியவருக்கு நிர்பந்தம்
ஏப்ரல் 03,2010,15:01 IST

புதுடில்லி: அரசு நிலத்தை கையகப்படுத்திய கர்நாடக ஐ கோர்ட் தலைமை நீதிபதி தினகரனுக்கு பெரும் தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது. இவரால் கோர்ட் பணிகள் பாதிக்கப்பட்டதாகவும் , இதனால் இவரை விடுப்பில் செல்லவும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் காவேரிராஜபுரத்தில் அரசு நிலத்தை கையகப்படுத்தி வேலி அமைத்து தனக்கு சொந்தமாக்கிட முயற்சித்தார் என்பது இவர் மீதான குற்றச்சாட்டு. மேலும் இது தொடர்பாக லோக்கல் நிர்வாக அதிகாரிகள் பரிசீலிக்க சென்றபோது நீதிபதி தினகரன் மற்றும் இவரது வேலையாட்கள் மிரட்டியதாகவும் குற்றம் எழுந்தது.

நீதிபதிக்கு எதிராக கர்நாடக கோர்ட் வக்கீல்கள் இவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில் இந்த பிரச்னை ராஜ்யசபா வரை சென்றது. இவருக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து விசாரிக்க ராஜ்யசபா தலைவர் ஹமீது அன்சாரி உத்தரவு பிறப்பித்தார். இந்தக்குழுவும் விசாரித்து வருகிறது. இந்த நில விவகாரம் தொடர்பாக இந்த நீதிபதி தினகரன் சுப்ரீம் கோர்ட்டுக்கு நீதிபதியாகும் வாய்ப்பும் நிறுத்தி வைக்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கொண்ட தேர்வு குழுவினர் இவரை விடுப்பில் செல்லுமாறு இன்று கேட்டுக்கொண்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து இவர் வழக்குகளை சரிவர விசாரிக்கவில்லை என்றும் இதனால் வழக்குகள் தேக்கம் ஏற்பட்டு கோர்ட் பணிகள் பாதிக்கப்பட்டதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இந்த உத்தரவுக்கு கர்நாடக ஐகோர்ட் பார் அசோசியேஷன் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து இவருக்கு பதிலாக டில்லி ஐகோர்ட் நீதிபதி மதன் பி.லோகூர் என்பவரை கர்நாடக ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கவும் பச்சைக்கொடி காட்டியுள்ளது. மேலும் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கோகலே , சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக்கிடவும் பரிந்துரை செய்துள்ளது. ஜார்கண்ட் ஐகோர்ட் சீனியர் நீதிபதி இக்பால் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக்கிடவும் பரிந்துரைத்துள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

JESUS? CHRIST?- Gospels are Legends

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: