Madurai Temple Staff arrested

ரூ. 3,000 லஞ்சம்: மதுரை மீனாட்சி கோயில் ஊழியர் கைது

First Published : 23 Mar 2010 02:13:53 AM IST
Last Updated : 23 Mar 2010 09:17:07 AM IST

மதுரை,மார்ச் 22: பூ கட்டும் கோயில் பணியாளரிடம் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீஸôர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
மதுரை ஐராவதநல்லூரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். கோயில் ஊழியரான இவர், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பூ கட்டும் பணியில் உள்ளார்.
1981}ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்த இவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூக்கள் கொடுக்கப்பட்டு வந்தது. அந்த பூக்களைத் தொடுத்து சுவாமிக்கும், திருவிழா நேரத்திலும் கோயில் நிர்வாகம் பயன்படுத்துவது வழக்கம்.
இந்நிலையில், 2008}ம் ஆண்டுக்குப் பின்னர் வெளி மார்க்கெட்டில் பூக்கள் வாங்கிக்கொண்டு அதற்கான ரசீதைக் கொடுத்து கோயில் நிர்வாகத்திடம் பணம் பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டது.
எனவே, 2008 முதல் 2010 வரை வெளி மார்க்கெட்டில் பூ வாங்கியது தொடர்பாக ரூ. 1,35,660 மதிப்புள்ள 11 ரசீதுகளும், திருவிழா சமயத்தில் பூ தொடுத்தது தொடர்பாக ரூ. 24,680 மதிப்புள்ள 3 ரசீதுகளையும் கோயில் நிர்வாகத்திடம் பாலசுப்பிரமணியன் சமர்ப்பித்துள்ளார்.
இந்த ரசீதுகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றால், மொத்தத் தொகையில் 20 சதம் கமிஷன் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என, கோயில் நிர்வாக அதிகாரியின் நேர்முக அலுவலர் அய்யம்பெருமாள் கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதற்கான கமிஷன் தராததால், பணம் கொடுப்பதை அவர் நிறுத்தி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீஸில் பாலசுப்பிரமணியன் புகார் செய்தார்.
இந்நிலையில், ரசாயனம் தடவிய ரூ.3,000 பணத்தை பாலசுப்பிரமணியத்திடம் கொடுத்து அய்யம்பெருமாளிடம் கொடுக்குமாறு லஞ்ச ஒழிப்பு போலீஸôர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து, அந்த பணத்தை அய்யம்பெருமாளுக்குக் கொடுக்கும் போது மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீஸôர் அய்யம்பெருமாளை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

JESUS? CHRIST?- Gospels are Legends

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: