ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹவாலா பணம் அதிகரிப்பு : சத்தமின்றி அரங்கேறும் தீவிரவாத செயல்கள்

மார்ச் 16,2010,00:00 IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6909

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதும் ,அங்கிருந்து இங்கு வருவதும் அதிகரித்துள்ளது. ஹவாலா பணமாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தாலும், போலீசார் கண்டு கொள்ளாமல் ஒதுங்குவதால், தீவிரவாத செயல்கள் சத்தமின்றி அரங்கேற வாய்ப்புகள் உள்ளன.

மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு , கீழக்கரையில் ஒருவரை கியூ பிரிவு போலீசார் பிடித்த போது, அவரிடம் எட்டு லட்ச ரூபாய் ஹவாலா பணம் மற்றும் சேட்டிலைட்டு போன், துப்பாக்கி குண்டுகள், ஹெராயின் போன்றவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் இலங்கையிலிருந்து பணம் வந்ததாக தெரியவந்தது. இதை தொடர்ந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து தற்போது மீண்டும் பண பரிமாற்றங்கள் நடந்து வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், பெரியபட்டணத்தை சேர்ந்த ஒருவர் 42 லட்சம் ரூபாயை , மலேசியாவிற்கு ஒருவர் மூலம் கொடுத்து விட்டதாகவும், அந்த பணம் மோசடி செய்யப்பட்டதாகவும், புகார் செய்யப்பட்டுள்ளது.

பெரியளவில் பணம் வெளிநாட்டிற்கு செல்கிறது என்றவுடன், போலீசாரும் தீர விசாரணை செய்து இருக்க வேண்டும்.ஆனால் இவர்கள் பெயரளவிலே மோசடி வழக்குபதிவு செய்துள்ளனர். இந்த பணம் எங்கிருந்து, எப்படி வந்தது? எதற்காக வெளிநாட்டிற்கு அனுப்பபடுகிறது? என்ற கேள்விக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி உள்ளன. வெளிநாட்டில் நடந்த மோசடிக்கு , அவசர அவசரமாக இங்கு போலீசார் வழக்குபதிவு செய்தது குறித்தும் சந்தேகத்தை எழுப்புகிறது. வழக்குபதிவு செய்த போது, குற்றவாளியாக குறிப்பிட்டுள்ள நபர்களை, போலீசார் கைது செய்யாமல் விடுவித்துள்ளனர். வழக்கும் பதிந்து, கைதும் செய்யாமல் பெயரளவிற்கு மட்டும் வழக்கு போட்டதின் ரகசியம் புரியாத புதிராக உள்ளது. யாரையோ திருப்திபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் வழக்குபதிவு செய்துள்ளனர்.

போலீசாரின் இதுபோன்ற மெத்தனபோக்கால்,””வெளிநாட்டிற்கு பணம் அனுப்புவது, அங்கிருந்து ஏஜன்டுகள் மூலம் பணம் பெறுவது போன்றவற்றால் , தீவிரவாத செயல்கள் சத்தமின்றி அரங்கேறுவதாக சந்தேங்களும் எழுந்துள்ளன. இது தொடர்பாக உளவு பிரிவு, புலனாய்வு துறையினர் தீவிர விசாரணை மேற் கொள்ளவேண்டும் .

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

JESUS? CHRIST?- Gospels are Legends

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: