நடிகை ரஞ்சிதாவும் நித்யானந்தா CD

நித்ய ஆனந்தம் பெறும் பலான கிளு கிளு செக்ஸ் பாதிரிகள்

http://www.activeboard.com/forum.spark?aBID=134804&p=3&topicID=34454994&page=1


நித்யானந்தாவுக்கு நான் சேவைதான் செய்தேன். காலைப் பிடித்துவிடுவதும், மாத்திரை கொடுப்பதும், சாப்பிட உணவு கொடுப்பதும் தவறா.. அதில் ஏதேதோ சேர்த்து நீலப்படமாக்கிவிட்டார்கள்!, என்று ஆவேசப்பட்டுள்ளார் நடிகை ரஞ்சிதா.

நித்யானந்த சாமியாருடன் ரஞ்சிதா படுக்கையில் உருண்டு புரண்ட காட்சிகள் தொலைக்காட்சியில் வெளியாகி, போலிச் சாமியாரின் முகத்திரையை விலக்கிக் காட்டியது.

இந்த வீடியோ வெளியான கையோடு சாமியாரும் ரஞ்சிதாவும் தலைமறைவாகிவிட்டனர்.

கும்பமேளாவில் சாமியார் இருப்பதாக அவரது ஆசிரமத்தினர் கூறியுள்ளனர். வீடியோவில் சாமியாருடன் இருப்பவர் ரஞ்சிதாதான் என்றும் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

ரஞ்சிதா எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்தது. இப்போது அவர் கேரளாவில் ரகசிய இடமொன்றில் தங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. அவர் செல்போன் மூலம் குமுதம் ரிப்போர்டர் இதழுக்கு பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

அந்த வீடியோவில் இருப்பது நீங்கள்தானே?

ஆமாம். நான்தான். ஆனால் அதை மிகைப்படுத்தி ஏதேதோ சேர்த்துள்ளனர். எனக்கு நித்யானந்தர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. அது ஊருக்கே தெரியும். அவரது கொள்கைகள், ஆன்மீக உரைகளால் கவரப்பட்டவள் நான். எனக்கு பல ஆண்டுகளாக இருந்த வீஸிங் தொல்லையை ஒரே நாளில் குணப்படுத்தியவர் அவர்… அன்று முதல் அவரது பக்தை ஆகிவிட்டேன்…

அந்த ஆபாச காட்சிகள்…

காலைப் பிடித்து விடுவதும் மாத்திரை கொடுப்பதும் உணவு தருவதும் ஒரு பணிவிடைதானே.. அத்துடன் ஏதேதோ சேர்த்து ஒரு நீலப்படம் அளவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.

சாமியாரை மிரட்டி பணம் பறிக்கத்தான் இப்படிச் செய்தீர்களாமே?

நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவள். பணத்துக்காக நானே இப்படியெல்லாம் படமெடுத்தேன் என்று மீடியா சொல்வதை என்னால் தாங்க முடியவில்லை. பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. எந்த ஒரு பெண்ணாவது தன்னைத்தானே இப்படி எடுத்துக் கொள்வாளா ?

உங்கள் கணவர் ராகேஷை ஏன் விவாகரத்து செய்தீர்கள்?

பத்திரிகை- டிவிக்களில்தான் இப்படி சொல்கிறார்கள். ஏன் இப்படி? எனக்கும் என் கணவருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை.

நடந்த உண்மையை வெளிச்சத்துக்கு வந்து நீங்களே சொல்லலாமே?

அதான் இப்போது சொல்லிட்டேனே… நித்யானந்தா மகாஞானி. அடுத்த இரண்டு வாரங்களில் எல்லாவற்றையும் விவரமாகச் சொல்வார். தயவு செய்து மீடியாக்கள் என்னை மேலும் காயப்படுத்தாதீர்கள்…”

-இவ்வாறு கூறியுள்ளார் ரஞ்சிதா.

சுவாமி நித்யானந்தரிடம் சன் டிவி 50 கோடி கேட்டதாம்

ஆங்கில ஊடங்களும் இணையத்க்திலும் வெளியாகும் தகவல்கள்.

தமிழ் செய்திகள் எல்லாம் நித்யானந்தாவைக் காணோம், அயல்நாட்டிற்கு ஓடிவிட்டார், ஹரித்வாருக்கு ஓடிவிட்டார், ரஞ்சிதாவுடன் ஓடிவிட்டார் என்றெல்லாம் கூறுகின்றன.

ஆனால் ஆங்கில பத்திரிக்கைகள் வேறுவிதமாகக் கூறுகின்றன.  ஏற்கெனவே நித்யானந்தருடைய வக்கீல் சாமியார் எங்கேயும் ஓடி ஒளியவில்லை, வாரணாசியில்தான் இருக்கிறார், என்றார், “அவர் கும்பமேளாவில் உலகத்தின் பல இடங்களில் இருந்து வந்துள்ள 4,000 சீடர்களுடன் கலந்து கொல்கிறார்.  மார்ச் 18 திரும்புகிறார்”, என்று ஸ்ரீதர் கூறினார்.

அந்த நடிகையைப் பற்ற்றிக் கேட்டபோது, அவர் தனது பிரச்சினைக்காக அதாவது திருமணத்தோல்விற்குப் பிறகு மன ஆறுதல் கிடைக்க ஆஸ்ரமத்திற்கு வந்தார், சீடரானார். அத்தகைய நிலையில் உள்ளாரே என்று கேட்டதற்கு அந்த வீடியோ காட்சிகள் எல்லாம் மார்ஃபிங் செய்யப்பட்டது, மற்றும் அந்த நடிகையின் உருவமும் போலியானது. “வீடியோவில் இருக்கும் உருவத்தின் கழுத்துப்பகுதி எப்பொழுதும் மூடியிருப்பது போல இருக்கும். அது மார்ஃபிங் செய்ததுதான். மேலும் அவர் நெற்றியில் இருக்கும்பொட்டு எல்லா காட்சிகளிலும் குலையாமல் அப்படியே இருக்கிறது. அதுமட்டுமல்லாது படுக்கையறை பளிச்சென்று தெரிகின்றது”.

அந்த நடிகை ஏன் வெளியில் வரவில்லை என்று கேட்டதற்கு, “அப்படி வந்தால், வலுக்கட்டாயமாக அவர் சாமியாருக்கு எதிராக புகார் கொடுக்கத் தூண்டப்படுவார், ஆகையால் வரமாட்டார்”, என்றார்.

ஆஸ்ரமத்தில் உள்ள சாமியார்களின் தனிப்பட்ட விரோதங்கள், குறிப்பாக தான் என்ற உணர்வினால் இத்தகைய வீடியோ எடுக்கவேண்டும் என்று தோன்றியிருக்கலாம். நிச்சயமாக இதில் பணம் விளையாடி இருக்கிறது.

மேலும் ஸ்ரீதர் சொன்னதாவது, தொலைகாட்சியில் வீடியோவை வெளியிட்ட அந்த டிவி செனல் (அவர்களுடன்) ஒரு “டீல்” வைத்துக் கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல், அந்த டிவி செனல் சாமியாரிடம் ரூ. 50 கோடி கேட்டது, என்றும் குற்றம் சாட்டினார்

ஆசிரமத்தில் நடந்தது கொலை அல்ல-நித்யானந்தா சீடர்கள்

பெங்களூர்: நித்தியானந்தா ஆசிரமத்தில் கனடா நாட்டைச் சேர்ந்த பக்தர் கொலை செய்யப்படவில்லை. மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தார். அதற்கான மருத்துவ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன என்று பிடதி தியான பீட நிர்வாகிகள் கூறினர்.

பெங்களூர் பிடுதியில் உள்ள நித்யானந்தா தியான பீடத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், மூத்த சாமியாருமான நித்ய சச்சிதானந்தா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா சல்லாபம் செய்த வீடியோ விவகாரம், தியான பீடத்தில் பக்தர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும்புகார் [^]கள் உள்ளிட்டவை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து சச்சிதானந்தா விளக்கமளிக்கையில்,

பிடுதி ஆசிரமத்தில் கனடா நாட்டை சேர்ந்த பக்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டு இருக்கிறது. அந்த கனடா பக்தர் கொலை செய்யப்படவில்லை. இந்த புகார் முற்றிலும் உண்மைக்கு மாறானது.

கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி கனடா நாட்டை சேர்ந்த மெல்வின் பொய்ட் டையமன்ட் என்பவர் மாடியில் இருந்து திடீர் என்று தவறி கீழே விழுந்தார். அதில் அவர் காயமடைந்து இறந்தார்.

இது பற்றிய தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்தோம். இந்த தகவலை அவர்கள் சந்தேகமின்றி ஏற்றுக்கொண்டனர். இதற்கான பிரேத பரிசோதனை அறிக்கை உள்பட எல்லா ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது.

அதே போல் திருச்சியை சேர்ந்த சுரேந்தர் இங்கு தான் இருக்கிறார். அவர் இங்கு அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவரை மீட்டு கொடுக்கும்படியும் அவரது பெற்றோர் தெரிவித்ததாக பத்திரிகைகளில் செய்தி வந்தது.

சுரேந்தரே அவரது கைப்பட கடிதம் ஒன்றை எழுதி கொடுத்து இருக்கிறார். ‘எவ்வித வற்புறுத்தலினாலும், தியான பீடத்தில் இறங்கவில்லை. என்னுடைய முழு சுய உணர்வோடும், விருப்பத்தினாலும் தான் முழுமையாக இங்கு இருக்கிறேன் என்பதை ஆணித்தரமாக தெரிவித்து கொள்கிறேன்.

தியான பீடத்துக்கு எதிராக கொடுத்து உள்ள அனைத்து புகார்களையும் வாபஸ் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ எனறு சுரேந்தர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

நித்யானந்தா ஒரு ஆன்மிக குருவாக பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். அவர் தனது 3வது வயதில் இருந்து ஆன்மிக பயணத்தை தொடங்கினார். அவர் தனது பணியை தொடர்ந்து மேற்கொள்வார். அவரது வழியில், நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவோம்.

பிடுதி ஆசிரமம் உள்ள நிலத்துக்கு 100 சதவீதம் சட்ட ரீதியாக பட்டா உள்ளது. நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக கூறுவது தவறு.

நித்யானந்தா சாமிகள் பற்றிய ஆபாச வீடியோ காட்சிகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. வீடியோ காட்சிகளில் இருப்பது நித்யானந்தா இல்லை என்று சொல்ல மாட்டோம். ஆனால், உண்மை என்றும் சொல்ல மாட்டோம்.

இந்த வீடியோ காட்சிகள் அடங்கிய சிடியை லெனின் என்பவர் தயாரித்துள்ளார். அவர் 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார். அவருக்கு இதுபோன்ற நவீன உத்திகளை கையாளத் தெரியாது.

லட்சக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். வீடியோ காட்சிகள் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட அடுத்த நாளே சாமிகள் இங்கு வந்திருப்பார். ஆனால் இங்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவியது. அதனால் அவர் இங்கு வரவில்லை.

நடிகை ரஞ்சிதா கடந்த 7 மாதங்களாக ஆசிரமத்துக்கு வந்து செல்கிறார். மற்ற பக்தர்களை போல் அவரும் ஒரு பக்தராக தான் வந்து சென்றார்.

ரஞ்சிதா நித்யானந்தாவின் தீவிர பக்தை என்பதை தவிர வேறு எதுவும் சொல்ல முடியாது. நாட்டில் ஒருவர் மீது யார் வேண்டுமானாலும் புகார் கூறலாம். ஆனால் அந்த புகார்கள் அனைத்தும் உண்மை ஆகாது.

எங்கள் மீதான புகார்கள் குறித்து உண்மையை உலகுக்கு தெரிவிக்க நாங்கள் சட்டரீதியாக அணுக முடிவு செய்திருக்கிறோம்.

சாமிகள் பற்றி ஊடகங்களில் வரும் யூக செய்திகளுக்கு நான் பதில் சொல்ல முடியாது. அதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. என்னால் யூகிக்கவும் முடியாது.

இதுவரையில் எங்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்தது பற்றி தகவல் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆசிரமத்தில் நாங்கள் தொடர்ந்து எங்களது வழக்கமான பணிகளை செய்து வருகிறோம். போலீசார் எங்களுக்கு முழு பாதுகாப்பு கொடுத்து வருகிறார்கள் என்றார்

நித்யானந்தா மீது எந்தப் பெண்ணும் கற்பழிப்புப் புகார் கொடுக்கவில்லை – கமிஷனர்

சென்னை: நித்தியானந்தா மீது இதுவரை எந்தப் பெண்ணும் கற்பழிப்புப்புகார் [^] கூறவில்லை என்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

நித்யானந்தா மீதான கற்பழிப்பு வழக்கு கர்நாடக போலீசுக்கு மாற்றப்படுகிறது. இதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு தமிழக டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளேன்.

நித்யானந்தா மீதான மோசடி வழக்கை நாங்கள் தான் விசாரிப்போம். கற்பழிப்பு வழக்கில் கொலை மிரட்டல் சட்டப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் சட்டப்பிரிவில் கர்நாடக போலீசார் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் உதவி செய்வோம். கொலை மிரட்டல் சம்பவம் சேலத்தில் நடைபெற்றுள்ளது.

நித்யானந்தா மீது அவரது சீடர் லெனின் கொடுத்த புகார் அடிப்படையில் கற்பழிப்பு வழக்கு போட்டுள்ளோம். அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் [^]யாரும் இதுவரை புகார் கொடுக்கவில்லை.

நித்யானந்தா பற்றி விசாரிக்க வெளிமாநிலங்களுக்கு இதுவரை தனிப்படை போலீசார் அனுப்பப்படவில்லை. நித்யானந்தா சென்னைக்கு வரும்போது எங்கெங்கு தங்குவார், யார், யார் அவரை சந்திப்பார்கள், யார், யாரோடு அவருக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது, அவரது பண பரிவர்த்தனை எப்படி நடைபெற்றது என்பது பற்றி இப்போது பூர்வாங்க விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது.

மோசடி வழக்கு தொடர்பாக நித்யானந்தாவை கண்டிப்பாக விசாரிப்போம். கர்நாடக போலீசுக்கு, தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. மேற்பார்வையில் இந்த வழக்கில் தமிழக போலீசார் அனைத்து உதவிகளையும் செய்வார்கள் என்றார்.

லெனின் கருப்பனுக்குத்தான் சிக்கல்?

இதற்கிடையே, நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருப்பதைப் போன்ற காட்சிகளை வீடியோவில் படம் பிடித்த அவரது சீடர் லெனின் கருப்பன் என்கிற நித்ய தர்மானந்தாவைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி இந்து மக்கள் கட்சி போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளது.

தமிழக இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் அலுவலக மாநில செயலாளர் குமரவேல் இந்த மனுவை கொடுத்தார். அதில்,

நித்யானந்தா மீது புகார் கொடுத்துள்ள லெனின் ஒரு மோசடி நபர் ஆவார். சேலத்தில் காந்த படுக்கை விவகாரத்தில் பொதுமக்களை ஏமாற்றியவர். ஆசிரமத்தின் தனி அறையில் நடைபெற்ற சம்பவத்தை ரகசியமாக படம் பிடிக்கும் விலை உயர்ந்த அதிநவீன கேமரா லெனினுக்கு எப்படி கிடைத்தது.

இதற்காக பின்னணியில் அவருக்கு துணைபுரிந்தவர்கள் யார்?, டிசம்பர் மாதத்தில் பதிவு செய்த வீடியோ படங்களை ஏன் அப்போதே காவல்துறையிடம் கொடுத்து புகார் செய்யவில்லை. மேலும், முதலில் காவல்துறையினரை அணுகாமல் வீடியோ படங்களை செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பியது ஏன்?, சேலத்தில் நித்யானந்தா சாமியாரால் மிரட்டப்பட்டதாக சொல்லும் இவர் உடனடியாக ஏன் புகார் செய்யவில்லை. இப்படி அடுக்கடுக்கான சம்பவங்கள் லெனின் மீது எழுந்துள்ளது. அவர் கொடுத்த புகார் மனுவிலும் இந்த சந்தேகங்கள் உள்ளன.

மிரட்டி பணம் பறித்தல், மற்றும் இந்து சமயத்தை அவமானப்படுத்துதல் ஆகியவற்றை உள்நோக்கமாக கொண்டு லெனின் செயல்பட்டுள்ளதாக அறிகிறோம். எனவே, இவர்மீதும் விசாரணை நடத்தி, உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

லெனின் எங்கே…?

இதற்கிடையே கமிஷனர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து, அவரிடம் நித்தியானந்தா தொடர்பான புதிய வீடியோவைக் கொடுத்துத புகார் செய்த லெனின் கருப்பன் தற்போது எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் போலீஸ் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கமிஷனர் ராஜேந்திரனிடம் கூறுகையில், லெனின் புகார் கொடுத்ததோடு சரி, அதன்பிறகு அவர் எங்கு சென்றார் என்பது தெரியாது. போலீஸ் கட்டுப்பாட்டில் அவர் இல்லை.

காந்தப் படுக்கை மோசடி குறித்து எனக்குத் தெரியவில்லை. இப்போதுதான் நீங்கள் கேட்கிறீர்கள். அதுபோன்ற வழக்கு உள்ளதா என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் விசாரிக்கிறேன் என்றார் ராஜேந்திரன்Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: